பிரித்தானியாவில் மாயமான பெண்: உடலைக் கண்டுபிடிக்க உதவிய ஆவிகளுடன் பேசும் நபர் இவர்தான்...
பிரித்தானியாவில் இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான நிக்கோலா புல்லி (Nicola Bulley, 45) என்ற பெண், ஜனவரி 27ம் திகதி மர்மமான முறையில் மாயமானார்.
சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்
குடும்பத்தினர் எப்படியாவது நிக்கோலாவை உயிருடன் கண்டுபிடித்துவிடவேண்டும் என துடித்துக்கொண்டிருக்க, கடைசியில், இம்மாதம், அதாவது பிப்ரவரி 20ஆம் திகதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் அவர்.
இதற்கிடையில், நிக்கோலாவின் கணவர் அவரைக் கொன்றிருக்கலாம் என்ற வகையிலெல்லாம் செய்திகள் ஊடகங்களில் உலாவரத்துவங்கியிருந்தன.
Image: INSTAGRAM
ஆவிகளுடன் பேசும் நபர் செய்த உதவி
இப்படி, நிக்கோலா மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து வதந்திகள் உலாவரத் துவங்கிய நிலையில், ஆவிகளுடன் பேசுபவரான ஜேசன் (Jason Rothwell, 33) என்பவர், அந்தக் குடும்பத்துக்கு உதவ முன்வந்துள்ளார்.
ஜேசனும், அவரது நண்பர் ஒருவருமாக, தங்களுடைய சக்தியைப் பயன்படுத்தி நிக்கோலாவின் உடல் கிடக்கும் இடம் குறித்து பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்கள்.
Image: CHRIS NEILL
ஜேசன் நிக்கோலாவின் உடல் கிடக்கும் இடத்தைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு விளக்கமளித்துள்ள அவர், அந்தப் படத்தில் காணப்படுவது தான்தான் என்றும், தானும் தனது நண்பரும் நிக்கோலாவின் உடலைக் கண்டுபிடிக்க பொலிசாருக்கு உதவியது உண்மைதான் என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், நிக்கோலாவின் உடலைக் கண்டுபிடிக்க பொலிசாரோ, நிக்கோலாவின் குடும்பத்தினரோ தன்னிடம் கோரிக்கை வைக்கவில்லை என்று கூறியுள்ள ஜேசன், நிக்கோலாவின் கணவரைக் குறித்தும், அவரது குடும்பத்தினரைக் குறித்தும் வதந்திகள் உலாவரத் துவங்கியதால், அவர்களுக்கு உதவுவது என முடிவு செய்து தானும் தன் நண்பரும் நிக்கோலாவின் உடலைக் கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளார்.
Image: CHRIS NEILL
Image: Nikki Bulley - Mortgage Adviser/Facebook
Image: Facebook