150 பட்டங்கள்... இந்தியாவிலேயே அதிக பட்டம் பெற்ற நபர் யார் தெரியுமா?
சென்னையை சேர்ந்த பேராசிரியர் வி.என்.பார்த்திபன் இந்தியாவிலேயே அதிக பட்டம் பெற்ற நபர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
150 பட்டப்படிப்புகள்
ஒரு பட்டப்படிப்பை முடித்து தேர்ச்சி பெறுவதே இன்றைக்கு பலருக்கும் சவாலாக உள்ள நிலையில், சென்னையை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் 150க்கும் மேற்பட்ட பட்டங்களை பெற்று, இன்னும் படித்துக் கொண்டிருக்கிறார்.
இவரது வாழ்க்கை பயணம் இன்றைய தலைமுறையினர் பலருக்கும் மிகச்சிறந்த உதாரணமாகிறது.
பள்ளி காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு குடும்பத்தை சேர்ந்த இவருக்கு முதல் பட்டப்படிப்பு என்பதே கடினமாக இருந்துள்ளது.

தாயை பெருமைப்படுத்திய தருணம்
பத்தாம் வகுப்பில் 70 சதவிகிதல், பியுசி-யில் 49 சதவிகிதம் என சராசரி மாணவனாக இருந்த பார்த்திபன், முதல் பட்டத்தில் 59 சதவிகித மதிப்பெண்களை மட்டுமே பெற்றுள்ளார்.
காலையில் கல்லூரில், மாலையில் பணி என ஓயாத உழைத்து படித்த இவரது மதிப்பெண்ணால் பார்த்திபனின் தாயார் மகிழ்ச்சி அடையவில்லையாம்.
இதையே சவாலாக எடுத்துக்கொண்டு எப்படியாவது முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று தாய்க்கு காட்ட வேண்டும் என முடிவெடுத்தார்.

Walking Encyclopedia
1981ம் ஆண்டு படிப்பை தொடங்கிய இவருக்கு தற்போது 60 வயதாகிறது, இவரை walking encyclopedia என்றே அழைக்கிறார்கள், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தொடங்கி இன்று இந்தியாவின் பல கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றுள்ளார்.
1982ம் ஆண்டு முதல் கல்லூரிகளில் பணியாற்றத் தொடங்கினார், தற்போது RKM விவேகானந்தா கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.
ஒரே நேரத்தில் 4 பட்டங்கள் வரை பெற்றுள்ளார், மூன்று PhD முடித்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
இன்று வரை படித்துக்கொண்டிருக்கும் பார்த்திபன், தனது சம்பளத்தில் 90 சதவிகிதத்தை படிப்புக்காக மட்டுமே செலவழித்துள்ளாராம்.
காலையில் 5 மணிக்கு தொடங்கி இரவு 11.30 மணி வரை படிப்புக்காக மட்டுமே அதிக நேரம் செலவழிக்கிறாராம், ஞாயிறு மாலை நேரங்களில் கண்ணதாசன் பாடல்களை கேட்பது மட்டுமே படிப்பிலிருந்து ஓய்வெடுக்க காரணம். படிப்பது தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும்.
ஒருபோதும் அதனால் சோர்வடையவில்லை எனவும் உற்சாகமுடன் பேசுகிறார் பார்த்திபன்.

இவரது பட்டப்படிப்புகள்
13 Masters of Arts (MA)
 8 Masters of Commerce (MCom)
 4 Masters of Science (MSc)
 13 Masters of Law (various branches)
 12 Masters of Philosophy (MPhil)
 14 Masters of Business Administration (MBA)
 20 professional courses
 11 certificate courses
 9 PG diploma courses
 Several other diplomas and PG diplomas
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        