டிரம்ப் போலவே நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்த சீன டிரம்ப்: யார் இந்த ரியான் சென்?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போல் மிமிக்ரி செய்து சீன கலைஞர் ஒருவர் பிரபலமடைந்துள்ளார்.
சீன டிரம்ப்
சீனாவின் சாங்கிங் பகுதியை சேர்ந்த 42 வயது ரயான் சென் என்ற நபர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போலவே உடல் அசைவுகள் மற்றும் மிமிக்ரி செய்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
Meet Ryan Chen…
— ❣️Anne❣️ (@USA_Anne711) November 24, 2025
He is a Trump Impersonator from China that has gone viral. pic.twitter.com/ETprvwfyDW
கட்டிடக்கலை கலைஞரான ரியான் சென், சீனாவில் ரியல் எஸ்டேட் துறை சரிவை சந்தித்த போது, வாழ்வாதாரத்திற்காக சமூக ஊடகங்களில் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் பணியை தொடங்கினார்.
அப்போது அவரது நண்பர் ஒருவர் “டொனால்ட் டிரம்ப் போல் நடித்து காட்டு” என கொடுத்த சவால் அவரை புகழின் உச்சிக்கு எடுத்து சென்றுள்ளது.
டிரம்பின் வீடியோவால் கிடைத்த புகழ்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பிரபலமான YMCA நடனம் மற்றும் அவரது தனித்துவமான சில வார்த்தைகள் ஆகியவற்றை பயன்படுத்தி ரியான் சென் வெளியிட்ட வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாக பரவி பல மில்லியன் ரசிகர்களை அவருக்கு வழங்கியது.
2024ம் ஆண்டு பிரபல யூடியூபர் IShowSpeed உடன் இணைந்து ரியான் சென் வெளியிட்ட வீடியோ அவரை உலக புகழ் பெற்றவராக மாற்றியது.
வாழ்வாதாரத்திற்கான மாற்றுத் திட்டமாக சமூக ஊடகங்களில் செயல்பட தொடங்கிய ரியான் சென் பின்னர் அவற்றை தன்னுடைய லாபகரமான தொழிலாக தன்னுடைய மிமிக்ரி மூலம் மாற்றியுள்ளார்.
AFP
சமூக ஊடகங்களில் கிடைத்த புகழின் மூலம், கார் நிறுவனங்கள், கேமிங் ஆப்ஸ் மற்றும் டிஜிட்டல் தயாரிப்புகளுக்கான தூதராக செயல்பட தொடங்கியுள்ளார். இதில் அவருக்கு பெருமளவு வருமானமும் கிடைத்து வருகிறது.
டிரம்பிற்கு அழைப்பு
அமெரிக்க ஜனாதிபதி இந்த ஆண்டு சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அவருக்கு சீன டிரம்ப் என அழைக்கப்படும் ரியான் சென் எளிய அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
அதில் “எங்கள் ஊருக்கு வந்து காரமான ஹாட்பாட் உணவுகளை சாப்பிட்டு பாருங்கள்” என தெரிவித்துள்ளார்.
இது வெறும் சாதாரண அழைப்பு மட்டுமே, நான் வெறும் காமெடியன், எனக்கு அரசியல் ஆசைகள் எதுவும் இல்லை என்றும் தெளிவாக தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |