கேட்டை மீண்டும் காப்பியடிப்பதாக குற்றம்சாட்டப்படும் மேகன்: அப்படி என்ன செய்தார்?
வேல்ஸ் இளவரசியை பின்பற்றுவதுபோல் மீண்டுமொரு செயலை மேகன் மார்க்கல் செய்திருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறார்.
கேட்டின் ஊஞ்சல் புகைப்படம்
இளவரசி மேகன் மார்க்கலின் சமீபத்திய புகைப்படம், 2019யில் செல்சியா மலர் கண்காட்சிக்காக அவர் வடிவமைத்த ஒரு தோட்டத்தில், இளவரசி கேட்டின் ஊஞ்சல் புகைப்படத்தை மிகவும் நினையூட்டுகிறது.
இது மீண்டும் மேகனை குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளது. அவர் தொடர்ந்து கேட் செய்யும் விடயங்களை அதே பாணியில் செய்வதாக விமர்சிக்கப்படுகிறார்.
விமர்சனம்
மேகனின் தனது புதிய As Ever தயாரிப்புகள் அனைத்தும் இரண்டாவது முறையாக, சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த பிறகு, அவர் ரசிகர்களை 'கேமிங்' செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட சிறிது நேரத்திலேயே அவரது இந்த புகைப்படம் வெளியானது.
அவர் தனது As Ever தயாரிப்புகளை விளம்பரப்படுத்த இதனை செய்திருக்கிறார். ஆனால், அவரது தயாரிப்புகள் விரைவாக தீர்ந்துவிட்டதாக கூறுவதை பலரும் எதிர்மறையாக விமர்சிக்கின்றனர்.
நீங்கள் யாரையும் முட்டாளாக்க வேண்டாம் மேகன் மார்க்கல் (Meghan Markle) என்று ஒரு சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |