அரசியலில் நுழையும் மேகன்? நிபுணர் பரபரப்பு தகவல்
பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவியான மேகன், அரசியலில் நுழையக்கூடும் என நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேகனுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
சமீபத்தில் ஹாலிவுட் நிபுணரான Ross King என்பவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, ஹரியின் மனைவி மேகனுடைய எதிர்காலம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது, அவர் மேகனைக் குறித்து சில சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டார். சமீபத்தில் பிரபல இசை நிறுவனம் ஒன்று திடீரென மேகனுடனான ஒப்பந்தம் ஒன்றை முறித்துக்கொண்டது. அதனால் ஹரி மேகன் தம்பதியர் பெரும் அதிர்ச்சிக்காளாகினார்கள்.
இந்நிலையில், மேகனுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என ஹாலிவுட் நிபுணரான Ross King என்பவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவாரா?
அப்போது, மேகன் அரசியலில் நுழையக்கூடும் என Ross King தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, மேகன் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவாரா என்றொரு கேள்வி எழுந்தது.
அதற்கு பதிலளித்த Ross King, ஏராளம் இளம்பெண்களுக்கு, குறிப்பாக கருப்பினத்தவர் முதலானவர்களுக்கு மேகனை பிடித்திருக்கிறது என்றார்.
Image: ITV
உடனடியாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், மேகன், கவர்னர் போன்ற பதவிகளுக்கு போட்டியிடலாம் என்றார் அவர்.
இதற்கிடையில், ராஜ குடும்ப நிபுணரான Kinsey Schofield என்பவர், மேகன் ஒரு நாள் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடக்கூடும் என தெரிவித்துள்ளார்.
அவருக்கு அரசியல் பிரபலங்கள் பலர் உதவி வருகிறார்கள் என்று கூறும் Kinsey, மேகன், ஹிலாரி கிளிண்டன், கமலா ஹாரிஸ் ஆகியோருடன் நட்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |