மேகன் மெர்க்கல் தொடர்பில் இதுவரை வெளிவராத உண்மை: அம்பலப்படுத்திய பிரித்தானிய அதிகாரி
பிரித்தானியாவில் வாழ்ந்துவந்த காலகட்டத்தில் மிக மோசமான அச்சுறுத்தலை மேகன் மெர்க்கல் எதிர்கொண்டுள்ளதாக முன்னாள் பயங்கரவாத தடுப்பு தலைவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
இதுவரை வெளிவராத உண்மை
பிரித்தானியாவின் மாநகர காவல்துறையில் முக்கிய பொறுப்பில் பணியாற்றியுள்ள நீல் பாசு என்பவரே மேகன் மெர்க்கல் தொடர்பில் இதுவரை வெளிவராத உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளார்.
@getty
அவர் மீதான அந்த அச்சுறுத்தல் என்பது இழிவானது மட்டுமல்ல உண்மையும் கூட என நீல் பாசு குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான அச்சுறுத்தல்களை அனுப்பிய சிலருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது எனவும் நீல் பாசு தெரிவித்துள்ளார்.
கைப்பட எழுத்தப்பட்ட அச்சுறுத்தல் என்பதுடன், அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். மேகன் மெர்க்கல் மீதான அத்தகைய அச்சுறுத்தல்களை விசாரிக்க, தனிப்படைகள் அமைக்கப்பட்டதாகவும், தொடர்புடைய நபர்கள் மீது வழக்குத் தொடுத்துள்ளதாகவும் நீல் பாசு குறிப்பிட்டுள்ளார்.
இனவாதமாக இருக்கலாம்
ஆனால், மேகன் மெர்க்கல் எதிர்கொண்ட அச்சுறுத்தலானது இனவாதமாக இருக்கலாம் எனவும், ஆனால் அதை வெளிப்படையாக நீல் பாசு தெரிவிக்க மறுத்துள்ளதாகவே கூறப்படுகிறது.
@getty
மேகன் மெர்க்கல் மற்றும் இளவரசர் ஹரி தம்பதியின் காதல் கதை தனியார் நிறுவனம் ஒன்று வெளியிடவிருக்கும் நிலையிலேயே தற்போது நீல் பாசு இதுவரை வெளிவராத அச்சுறுத்தல் தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.