ராணி இறுதி நிகழ்வில் மேகனிடம் கைகுலுக்க மறுத்த பெண்! தொடரும் நிறவெறி... வைரல் வீடியோ
ராணி இறுதி நிகழ்வில் மேகனுடன் கைகுலுக்க மறுத்த பிரித்தானிய பெண்.
பேசும்பொருளான வீடியோவால் மேகன் மீது நிறவெறி தொடருவதாக எழுந்த விவாதம்.
பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் இறுதி நிகழ்வுகளில் கெமரா கண்களால் கொத்தப்பட்டு, ஊடக வெளிச்சத்தால் மேகன் சூழப்பட்டுள்ளார்.
ஏனெனில் அவரின் ஒவ்வொரு அசைவும் பிரித்தானிய மக்களால் உற்று கவனிக்கப்பட்டு வருகின்றன. இந்தளவுக்கு ஊடக வெளிச்சம் கேட் மீது விழவில்லை என்பதே நிதர்சனமான உண்மை..!
அதன்படி மேகன் எவ்வாறு நடக்கிறார், அவரது முக பாவனைகள் எவ்வாறு உள்ளது, அவர் தன் கைகளை பொதுவெளியில் எவ்வாறு குலுக்குகிறார் என அவரின் ஒவ்வொரு அசைவும் உற்று நோக்கப்படுகிறது. காரணம், மேகன் ஒரு கருப்பினப் பெண். ஹாரியை திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு விவகாரத்து பெற்றவர்.
ராணி எலிசபெத்தின் இறுதி நிகழ்வுக்காக கணவர் ஹாரியுடன் இங்கிலாந்து வந்துள்ள மேகன் மார்கல் அரண்மனைக்கு வெளியே கூடியிருந்த பொதுமக்களுடன் அன்பாகவும், பணிவாகவும் கலந்துரையாடினர். அப்போதுதான் அந்த விரும்பத்தகாத நிகழ்வு நடந்தது.
மேகன் தடுப்பு வேலியில் வரிசையாக நின்றுக் கொண்டிருந்த மக்களுடன் கைக்குலுக்கினார். அப்போது அங்கு நின்றிருந்த பிரித்தானிய பெண் ஒருவர், மேகனுக்கு கைக்குலுக்க மறுத்துவிட்டார். அந்தப் பெண்ணை மேகன் நொடியில் கடந்துவிட்டார். ஆனாலும், இக்காட்சி ஊடகங்களிடம் சிக்கிக் கொண்டது.
Twitter
இது தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி மீண்டும் பேசும்பொருளாகின, இதோடு மகாராணியாரின் இறுதிச்சடங்குக்காக வந்துள்ள மேகன் தனது உடையில் மைக் ஒன்றை மறைத்து வைத்தபடி வந்ததாகவும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. அதே சமயம் அது மைக் இல்லை எனவும் இரத்த சர்க்கரையின் அளவை தொடர்ச்சியாக கண்காணிக்கும் கருவியாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
மேகனும் அவர் மீதான நிறவெறியும்
இளவரசர் ஹாரியை திருமணம் செய்ததன் மூலம் இங்கிலாந்தின் இளவரசியான முதல் கருப்பின பெண் என்ற பெருமையை மேகன் பெற்றிருந்தார். ஆனால், அரசக் குடும்பத்தினரும், பிரித்தானிய ஊடகங்களும் கனிவான முகத்தை மேகனுக்கு காட்டவில்லை.
நிறம் சார்ந்து அவர் ஊடகங்களால் தொடர்ந்து விமர்சனத்து உள்ளானார். ஊடகங்களால் டயானாவுக்கு என்ன நடந்ததோ, அதுவே மேகனுக்கும், ஹாரிக்கும் நடந்தது. ஒருகட்டத்தில் இதனை ஏற்று கொள்ளாத ஹாரி - மேகன் இணை இங்கிலாந்து அரச குடும்பப் பதவிகளிலிருந்து விலகுவதாகக் அறிவித்தனர். இருவரின் முடிவுக்கு ராணி எலிசபெத் ஒப்புதல் வழங்கினார்.
இந்த நூற்றாண்டிலும் அங்கு நிறவெறிப் போக்கு தொடர்வது என்பது நாகரிக சமுதாயத்திற்கு உகந்ததல்ல என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
Lady in the blue having none of it ? pic.twitter.com/gxitXe3Ice
— Michelle ?? (@TinkyTink) September 10, 2022