சார்லஸ் மன்னரின் தீவிர கண்காணிப்பு வட்டத்தில் மேகன் மெர்க்கல்: வெளியான உண்மை பின்னணி
மேகன் மெர்க்கலை மன்னர் சார்லஸ் கண்காணித்து வருவதாக அரண்மனை வட்டாரத்தில் தகவல்
பொதுவாக தன்னைப் பற்றி வெளியாகும் எந்தப் பதிவுகளையும் மன்னர் சார்லஸ் கண்டுகொள்வதில்லை
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் தமது மருமகள் மேகன் மெர்க்கல் தொடர்பில் முக்கிய முடிவுகள் எடுத்துள்ளதாகவும், தனிப்பட்ட முறையில் தமது மருமகளை மன்னர் சார்லஸ் கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர் ஹரி- மேகன் தம்பதி தற்போது செயற்படும் ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் வரிசையில் இல்லை. மட்டுமின்றி, அந்த பொறுப்பில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளதுடன், தற்போது அவர்கள் அமெரிக்காவில் குடியிருந்தும் வருகின்றனர்.
இதனால், ராஜகுடும்பத்தில் இருந்து ஆண்டு தோறும் ஒதுக்கப்படும் நிதியுதவிகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேகன் மெர்க்கலை மன்னர் சார்லஸ் கண்காணித்து வருவதாக அரண்மனை வட்டாரத்தில் தகவல் கசிந்துள்ளது.
அதாவது மேகன் மெர்க்கலின் அனைத்து ஊடக நேர்காணல்கள், சஞ்சிகை நேர்முகங்கள் என அனைத்தும், தவறாமல் மன்னர் சார்லஸ் பார்வைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மட்டுமின்றி, மேகன் மெர்க்கல் கூறும் கருத்துகளை மன்னர் சார்லஸ் மனப்படம் செய்துவைத்திருக்கும் சூழலும் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாக தன்னைப் பற்றி வெளியாகும் எந்தப் பதிவுகளையும் மன்னர் சார்லஸ் கண்டுகொள்வதில்லை என்பதுடன், அதை நினைவில் வைத்திருப்பதும் இல்லை. ஆனால் மேகன் விவகாரத்தில் மன்னர் சார்லஸ் பொறுப்பான அதிகாரிகள் போல் நடந்து கொள்வதாகவும், மேகன் மெர்க்கல் ராஜகுடும்பத்திற்கு வந்த பின்னர், அவர் அளித்துள்ள அனைத்து முதன்மை பேட்டிகள், விளம்பரங்கள் என அனைத்தையும் மன்னர் சார்லஸ் சேகரித்து வைத்துள்ளார்.
@getty
பிரித்தானிய ராஜகுடும்பத்தை பாதிக்கும் எந்த நடவடிக்கையும் மேகன் மெர்க்கல் தரப்பில் வெளிவரக் கூடாது என்றே சார்லஸ் எதிர்பார்க்கிறாராம். பிரித்தானிய ராஜகுடும்பமானது ஒரு சர்வதேச அடையாளம் எனவும் மேகன் மெர்க்கல் குறிப்பிடும் ஒற்றை சொல்லால் கூட அந்த அடையாளத்திற்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என மன்னர் சார்லஸ் விரும்புவதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி, ராஜகுடும்பத்து உறுப்பினர் என்ற காரணத்தால், அதை சாதகமாக பயன்படுத்தி மேகன் மெர்க்கல் வருமானம் ஈட்டுவதும் மன்னர் சார்லஸுக்கு உடன்பாடில்லை என்றே கூறுகின்றனர். இருப்பினும், மேகன் தொடர்பில் ராஜகுடும்பத்து ஆதரவாளர்கள் நேர்மறையான கருத்துகளையே கூறுகின்றனர்.
மேகனின் இதுவரையான நடவடிக்கைகள் மிக நுணுக்கமாக திட்டமிடப்பட்டு, தனக்கான ஒரு அடையாளத்தை அவர் உருவாக்கி வருவதாகவும், அதில் அவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் எனவும் பாராட்டுகின்றனர்.