மேகன் மார்க்கலுக்கு 2022ம் ஆண்டுக்கான GQ மென் விருது: இளவரசர் ஹரி விழாவில் பங்கேற்பதாக தகவல்
பிரித்தானியாவின் கெளரவமான GQ மென் விருதைப் பெற மேகன் மார்க்கல் பரிந்துரை.
தொண்டு பணிகளுக்காக மேகன் விருதைப் பெற இருப்பதாக தகவல்.
பிரித்தானியாவின் கெளரவமான GQ மென் விருதைப் பெற சசெக்ஸ் டச்சஸ் இளவரசி மேகன் மார்க்கல் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
ஸ்வான்கி ஷோபிஸ் பாஷ் (The swanky showbiz bash) என்பது பிரித்தானியாவின் பிரபலமான நிகழ்வுகளில் ஒன்றாகும், இதில் கடந்த ஆண்டு டேவிட், விக்டோரியா பெக்காம், மடோனா, டுவா லிபா மற்றும் டொனடெல்லோ வெர்சேஸ் போன்றோர் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் தற்போது இந்த ஆண்டுக்கான விழா நவம்பர் 16 அன்று லண்டனில் உள்ள டேட் மாடர்னில் நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Getty
மேலும் இதில் பிரித்தானியாவின் சசெக்ஸ் டச்சஸ் இளவரசி மேகன் மார்க்கல் நேரில் கலந்து கொண்டு 2022 GQ Men of the year விருதுகளில் ஒரு கெளரவ விருதைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
41 வயதான மேகன் மார்க்கல் தனது தொண்டு பணிகளுக்காக மிக சிறந்த விருதுகளில் ஒன்றினை விழாவில் பெறுவார் என நம்ப தகுந்த ஆதாரம் தெரிவித்துள்ளது.
மேலும் வோக்கின் தலைமை ஆசிரியர் எட்வர்ட் என்னின்புல் உடனான நட்பின் காரணமாக அவர் ஏற்கனவே GQ உடன் நெருங்கிய உறவை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
GQ Men of the year பொதுவாக செப்டம்பரில் நடைபெறும் நிலையில், இளவரசர் ஹரி மற்றும் இளவரசி மேகன் கலந்து கொள்ள விரும்புவதால் அவர்களுக்கு இடமளிக்கும் வகையில் நிகழ்ச்சியானது நவம்பருக்கு மாற்றப்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு; 37 ஆண்டுகள் காணாத வீழ்ச்சி: டாலருக்கு எதிராக தொடர்ந்து சரியும் பிரித்தானிய பவுண்டு
இதற்கிடைப்பட்ட நாட்களில் மேகன் மற்றும் இளவரசர் ஹரி அவர்களது மினி ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளன.
செப்டம்பரில் நடைபெற இருந்த நிகழ்ச்சியின் டிக்கெட்டுகளின் விலை £5,999 ஆகும்.