37 ஆண்டுகள் காணாத வீழ்ச்சி: டாலருக்கு எதிராக தொடர்ந்து சரியும் பிரித்தானிய பவுண்டு
பிரித்தானிய பவுண்டு 37 ஆண்டுகள் இல்லாத குறைந்த நிலையில் வர்த்தகம் செய்யப்பட்டது.
ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கீர்ன்பேக்குடன் ஒப்பிடும் போது பிரித்தானிய நாணயம் 20%க்கும் மேல் இழந்துள்ளது.
அமெரிக்காவின் டாலருக்கு எதிரான பிரித்தானியாவின் பவுண்டு மதிப்பு 37 ஆண்டுகள் இல்லாத வீழ்ச்சியை அடைந்துள்ளது.
பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் மற்றும் நாட்டின் chancellor குவாசி குவார்டெங் (Kwasi Kwarteng) இணைந்து பிரித்தானியாவின் மிகப்பெரிய வரி குறைப்பு திட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிவித்தனர்.
EPA
இதற்கிடையில் பெடரல் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்த திட்டமிடுவதில் இருந்து அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வருகிறது, மேலும் இங்கிலாந்து வங்கி 50 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திங்கட்கிழமை தொடக்கத்தில் பிரித்தானியாவின் பவுண்டு மதிப்பு அமெரிக்க டாலருடன் ஒப்பிடும் போது அதன் கீழ்நோக்கிய போக்கில் தொடர்ந்து சென்று 5% வரை சரிந்து $1.08 க்கும் கீழே உள்ள நிலையை எட்டியது.
PA
அத்துடன் பிரித்தானிய பவுண்டு 37 ஆண்டுகள் இல்லாத குறைந்த நிலையில் வர்த்தகம் செய்யப்பட்டது.
உலகளவில் உள்ள புதிய முதலீட்டாளர்கள் அமெரிக்க நாணயத்தை நோக்கி விரைந்து உள்ள நிலையில், டாலருக்கு நிகரான பவுண்டு மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கீர்ன்பேக்குடன் ஒப்பிடும் போது பிரித்தானிய நாணயம் 20%க்கும் மேல் இழந்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு; ஹரி மற்றும் மேகனுக்காக கண்ணீர் விட்டு கதறிய அரச உதவியாளர்கள்: திட்டம் முன் தீர்மானிக்கப்பட்டது என தகவல்
இது தொடர்பாக அவுஸ்திரேலியாவின் காமன்வெல்த் வங்கியின் சர்வதேச பொருளாதாரத் தலைவர் ஜோசப் கபுர்சோ, பிரித்தானியாவின் மோசமான நிலைமை அமெரிக்காவின் டாலருக்கான ஆதரவை அதிகரிக்கிறது, எனத் தெரிவித்தார்.