பதவி கொடுத்து ஹரியை டம்மியாக்கிய மன்னர்?: இளவரசர் ஹரியின் கோபத்தின் பின்னாலுள்ள இரகசியம்
சமீபத்தில் மன்னர் சார்லஸ் அரசின் ஆலோசகர்கள் பட்டியலில் தனது சகோதரி மற்றும் சகோதரரையும் இணைக்க முடிவு செய்திருந்தார்.
அரசின் ஆலோசகர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
தற்போது, அரசின் ஆலோசகர்கள் என்ற பொறுப்பில் இளவரசர் வில்லியம், இளவரசர் ஹரி, இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் இளவரசி பீட்ரைஸ் ஆகியோர் உள்ளனர். மன்னரின் மனைவி என்ற முறையில் ராணி கமீலாவும் தன் கணவர் சார்பில் இந்த பொறுப்பை நிறைவேற்றலாம்.
இந்நிலையில், தனது சகோதரியாகிய இளவரசி ஆன் மற்றும் தனது சகோதரர் இளவரசர் எட்வர்ட் ஆகியோரையும் அரசின் ஆலோசகர்கள் பட்டியலில் இணைக்க விரும்புகிறார் மன்னர் சார்லஸ்.
அதை முறைப்படி செய்வதற்காக தக்க நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்றத்தின் மேலவைக்கு கடிதம் எழுதியுள்ளார் மன்னர்.
image - POOL
அரசின் ஆலோசகர்கள் என்பவர்கள் யார்?
பிரித்தானிய சட்டப்படி, மன்னரின் மனைவி, மற்றும் அரியணை ஏறும் வரிசையில் உள்ள, 21 வயதுக்கு மேற்பட்ட முதல் நான்கு பேர் அரசின் ஆலோசகர்கள் ஆவர்.
மன்னர் உடல் நலம் பாதிக்கப்பட்டாலோ, வெளிநாடு சென்றிருந்தாலோ, அதனால் அரசின் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், மன்னர் சார்பில் கடமையாற்ற இந்த அரசின் ஆலோசகர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
image - thesun
இந்நிலையில், இளவரசர்கள் ஆண்ட்ரூ மற்றும் இளவரசர் ஹரி ஆகியோர் ராஜ குடும்பத்துக்கு அவப்பெயர் வரும் வகையில் நடந்துகொண்டதால் அவர்கள் அரசின் ஆலோசகர்கள் பொறுப்பிலிருந்து நீக்கப் படலாம் என்ற கருத்து நிலவியது.
ஆனால், அவர்களை பதவியிலிருந்து நீக்காமல், அதே நேரத்தில் தனது சகோதரர் மற்றும் சகோதரிக்கும் பொறுப்புக்களை வழங்க திட்டமிட்டுள்ளார் மன்னர்.
மன்னர் யாரையும் விடாமல் அனைவரையும் அணைத்துக்கொள்ளும் மனப்பான்மையுடன் இந்த முடிவெடுப்பதாக பலரும் பாராட்டியிருந்தனர்.
ஹரியின் பார்வை வேறு மாதிரி இருக்கிறது.
அதாவது, அரசின் ஆலோசகர்களாக மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்களான இளவரசி ஆன் மற்றும் இளவரசர் எட்வர்ட் ஆகியோர் இருப்பதால், மன்னர் உடல் நலம் பாதிக்கப்பட்டாலோ, வெளிநாடு சென்றிருந்தாலோ கூட, தன்னால் ராஜ குடும்பப் பொறுப்புகளை மேற்கொள்ள முடியாமலே போய்விடும் என ஹரி கருதுகிறார்.
ஆக, மன்னரின் இந்த முடிவு தன்னை ஓரங்கட்டுவதாக இருப்பதாகவே அவர் நினைப்பதால், அவர் மிகவும் வருத்தமடைந்துள்ளதாக ராஜ குடும்ப நிபுணர்கள் கூறுவதாக ராஜகுடும்ப விமர்சகரான Megyn Kelly என்பவர் தெரிவித்துள்ளார்.
Credit: Alamy