மேகன் மார்க்கல் டி-சர்ட்டில் பொறிக்கப்பட்டு இருந்த மறைமுகமான கருத்துகள்: பெண்கள் போராட்டத்திற்கு ஆதரவு
ஹிஜாப் முறையாக அணியாததாக தெரிவித்து 22 வயது Mahsa Amini என்ற பெண் பொலிஸாரால் தாக்கப்பட்டு மரணமடைந்தார்.
மேகன் மார்க்கல் அணிந்திருந்த கருப்பு நிற டி-சர்ட்டில் பெண்கள், வாழ்வு, சுதந்திரம் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருந்தது.
Women@Spotify நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரித்தானிய இளவரசி மேகன் மார்க்கல் தான் அணிந்து வந்த டி-சர்ட் மூலம் ஈரானின் பெண்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஈரானில் ஹிஜாப் முறையாக அணியாததாக தெரிவித்து 22 வயது Mahsa Amini என்ற பெண் பொலிஸாரால் கொடூரமாக தாக்கப்பட்டு மரணமடைந்தை தொடர்ந்து, ஈரானில் 5 வார காலமாக பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Image: mandanadayani/Instagram
ஈரானிய பெண்களின் போராட்டத்திற்கு உலக முழுவதும் உள்ள பெண் தலைவர்கள், பிரபலங்கள் என பெரும்பாலனோர் தங்களின் ஆதரவு தெரிவித்து வந்தனர், அதிலும் சிலர் தங்கள் தலை முடிகளை வெட்டி ஈரானிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் Women@Spotify என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரித்தானிய இளவரசி மேகன் மார்க்கல், ஈரானில் பெண்கள் நடத்தி வரும் ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக சில மறைமுக ஆதரவு கருத்துக்கள் பொறிக்கப்பட்ட டி-சர்ட்டை அணிந்து வந்துள்ளார்.
மேகன் மார்க்கல் அணிந்திருந்த கருப்பு நிற டி-சர்ட்டில் ஃபார்சி மொழியில் பொறிக்கப்பட்டு இருந்த அந்த எழுத்துகள் பெண்கள், வாழ்வு, சுதந்திரம் ஆகியவற்றை குறிப்பிட்டு இருந்தது.
REUTERS
மேலும் மேடையில் ஏறி உரையாற்றிய மேகன் மார்க்கல், வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தும் தைரியமான பெண்களை பாராட்டினார், அத்துடன் ஈரானிய பெண்களின் ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு தனது ஆதரவு கருத்துகளையும் வெளிப்படுத்தினார்.
கூடுதல் செய்திகளுக்கு: நகரை விட்டு வேகமாக வெளியேற்றப்படும் மக்கள்: நிலைமை கடினமானது என ரஷ்யா எச்சரிக்கை!
ஆர்க்கிவெல்லின் இரண்டு நிர்வாக உறுப்பினர்களுடன் Women@Spotify நிகழ்ச்சியில் சசெக்ஸின் டச்சஸ் மேகன் மார்க்கல் தோன்றினார். அவர்களில் ஒருவர் உலகளாவிய தகவல்தொடர்புகளின் நிர்வாக துணைத் தலைவர் ஆஷ்லே ஹேன்சன், மற்றொருவர் ஆர்க்கிவெல்லின் நிர்வாகத்தின் தலைவர் மந்தனா தயானி.
இவற்றில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இரு பெண்களும் ஈராந் நாட்டை சேர்ந்தவர்கள்.
Image: mandanadayani/Instagram