நகரை விட்டு வேகமாக வெளியேற்றப்படும் மக்கள்: நிலைமை கடினமானது என ரஷ்யா எச்சரிக்கை!
50,000 முதல் 60,000 பொதுமக்கள் கெர்சன் நகரை விட்டு வெளியேற்றம்.
ஹிமார்ஸ் ஏவுகணைகள் கொண்டு நகரை தாக்கும் உக்ரைனிய படைகள்.
ரஷ்ய படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு உக்ரைனிய நகரான கெர்சனை மீண்டும் கைப்பற்ற உக்ரைன் ராணுவம் போராடி வரும் நிலையில், நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது என ரஷ்யாவின் பிராந்திய அதிகாரி கிரில் ஸ்ட்ரெமோசோவ் எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவின் போர் நடவடிக்கையின் உச்சக்கட்டமாக கிழக்கு உக்ரைனிய பகுதிகளின் மிக முக்கிய நான்கு நகரங்களை ரஷ்யா உடன் இணைத்து கொள்வதாக ஜனாதிபதி புடின் மாஸ்கோவில் நடைபெற்ற இணைப்பு விழாவில் அறிவித்தார்.
Meanwhile, Russian General Sergey “Armageddon” Surovikin sounds even more pessimistic, warning that “difficult decisions” lie ahead regarding the city of Kherson itself, as Ukraine’s counteroffensive nears. Future plans depend on “the emerging military-tactical situation.” pic.twitter.com/iL22DvEhB8
— Kevin Rothrock (@KevinRothrock) October 18, 2022
இதற்கு உலக நாடுகள் முழுவதும் எதிர்ப்பு வெளிவந்த நிலையில், ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை அத்துமீறிய செயல் என்றும், உக்ரைனிய பகுதிகளை முழுவதுமாக விடுவிக்கும் வரை எதிர்ப்பு தாக்குதல் தொடரும் என உக்ரைன் அறிவித்தது.
இந்நிலையில் ரஷ்யா தங்களுடன் இணைத்து கொண்டதாக அறிவித்த கெர்சன் நகரை உக்ரைனிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த தொடங்கி இருப்பதால், அந்த பகுதிகளில் உள்ள மக்களை டினிப்ரோ நதிக்கு(Dnipro river) அப்பால் ரஷ்ய படையினர் இடமாற்ற தொடங்கியுள்ளனர்.
இதுவரை 50,000 முதல் 60,000 பொதுமக்கள் கெர்சன் நகரை விட்டு வெளியேற்றப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
"Evacuation" in Kherson from the West bank to the East bank of Dnieper pic.twitter.com/XVM1vOX20a
— ТРУХА⚡️English (@TpyxaNews) October 19, 2022
இது குறித்து ரஷ்ய ஜெனரல் செர்ஜி சுரோவிகின் தெரிவித்த கருத்தில், பொதுமக்கள் வெளியேற்றங்கள் தொடங்கப்பட்டு இருப்பதால் “நிலைமை மிகவும் கடினமாக" இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.
அத்துடன் உக்ரைனிய படைகள் நகரத்தின் உள்கட்டமைப்புகள் மற்றும் மக்கள் குடியிருப்பு பகுதிகள் மீதும் ஹிமார்ஸ் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும் கெர்சன் நகர மக்களின் பாதுகாப்பான வெளியேற்றத்தை ரஷ்ய ராணுவம் உறுதி செய்து வருவதாகவும் ஜெனரல் செர்ஜி சுரோவிகின் தெரிவித்துள்ளார்.
Getty
இதற்கிடையில், ரஷ்யாவால் நிறுவப்பட்ட பிராந்திய அதிகாரி Kirill Stremousov விரைவில் உக்ரேனிய துருப்புக்கள் நகரம் மீது தாக்குதல் நடத்தும் என்று எச்சரித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: முடியாது என மறுத்த பள்ளி மாணவி.. அடித்தே கொன்ற அதிகாரிகள்: பதறவைக்கும் சம்பவம்
மேலும் தயவுசெய்து எனது வார்த்தைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள், நான் முடிந்தவரை விரைவாக வெளியேறுவது பற்றி பேசுகிறேன், டினிப்ரோ நதியின் மேற்குக் கரையில் உள்ள மக்கள் மிக பெரிய ஆபத்தில் உள்ளனர் என்று அவர் எச்சரித்தார்.