கோடை விடுமுறை கொண்டாட்டத்தில் இளவரசர் ஹரி:மேகன் மார்க்கெல் பகிர்ந்த புகைப்படங்கள்
பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய பயணம் தொடர்பான புகைப்படங்களை மேகன் மார்க்கெல் பகிர்ந்துள்ளார்.
பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய பயணம்
பிரித்தானிய இளவரசி மேகன் மார்க்கல் தன்னுடைய குடும்பத்தினருடன் மேற்கொண்ட ஐரோப்பிய மற்றும் பிரித்தானிய சுற்றுப்பயணம் தொடர்பான சில அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இளவரசி டயானாவின் பூர்வக இல்லத்திற்கு சென்றது போர்ச்சுக்கலில் அட்லாண்டிக் கடற்கரையில் நாட்களை செலவிட்டது போன்ற அழகிய தருணங்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள இந்த பதிவுக்கு “சம்மர் ஹாலிடே” (Summer Holiday) என்ற தலைப்புடன் 12 புகைப்படங்கள் அதில் இடம்பெற்று இருந்தது.
இந்த புகைப்படங்களில் இளவரசர் ஹரி, இளவரசி மேகன் மார்க்கெல், 7 வயது இளவரசி ஆர்ச்சி மற்றும் 5 வயது இளவரசி லிலிபெட்டும் இடம் பெற்று இருந்தனர்.

புகைப்பட தொகுப்பின் ஒரு புகைப்படத்தில் இளவரசி லிலிபெட் நார்த்ம்ப்டன்ஷையரில் உள்ள ஸ்பென்சர் குடும்பத்தின் பாரம்பரிய வீடான ஆல்டார்ப் (Althorp) தோட்டங்களில் நடந்து செல்வதும், அவருக்கு முன்னால் இளவரசர் ஹரியும், ஆர்ச்சியும் கையில் பூங்கொத்துடன் நடந்து செல்வதும் இடம்பெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |