திருமணத்தன்றே சார்லஸ் மனம் நோகும்படி நடந்துகொண்ட மேகன் மார்க்கல்! கொடுத்த 'நான்கு- வார்த்தை' பதில்
திருமணத்தன்று சார்லஸ் அன்பாக நடந்துகொண்டபோதும், அவரது மனம் நோகும்படி மேகன் மார்க்கல் நடந்துகொண்டுள்ளார்.
மன்னர் சார்லஸின் கனிவான கேள்விக்கு மேகன் மார்க்கல் நான்கே வார்த்தைகளில் ஆச்சரியமான பதிலை கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளவரசர் ஹரி-மேகன் திருமணத்தன்று, அப்போது வேல்ஸ் இளவரசராக இருந்த சார்லஸ் தனது புதிய மருமகளிடம் அன்பாக கேட்ட ஒரு கேள்விக்கு, வழக்கத்திற்கு மாறான நான்கு வார்த்தைகளில் பதிலளித்து மேகன் அதிர்ச்சியை கொடுத்ததார் என்று கூறப்படுகிறது.
மேகன் மார்க்கல் இளவரசர் ஹரியை 2014-ல் வின்ட்சர் கோட்டையில் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் அதிகாரப்பூர்வமாக கணவன் மனைவியாக உலகிற்கு தெரிவிக்கும் அந்த மகிழ்ச்சியான தருணத்தில் அரச குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் கூடியிருந்தனர்.
ஆனால், மேகன் மார்க்கலின் தந்தை தாமஸ் மார்க்கல் இந்த திருமண விழாவில் கலந்துகொள்ள வரவில்லை.
இதனால் மணப்பெண் மேகன் மார்க்கல் வருத்தமாக இருக்கலாம் என்று நினைத்த சார்லஸ், அவரது கவலைக்கு ஆறுதல் அளிக்கும் நோக்கத்தில், புதிய மருமகளை தந்தையின் ஸ்தானத்தில் கைப்பிடித்து தேவாலயத்திற்குள் அழைத்துச்சென்றால் அவருக்கு பெருமையாக இருக்கும் என்று நினைத்தார்.
இதுகுறித்து சார்லஸ் முன்வந்து மேகானிடம் கேட்டபோது, அவரது மனம் நோகும்படி நான்கு வார்த்தைகளில் தனது பதிலை கொடுத்தார் மேகன்.
இப்படியொரு அன்பான, கனிவான சைகைக்கு மேகன் அளித்த பதில் அப்போதைய வேல்ஸ் இளவரசரால் சற்றும் எதிர்பாராததாக இருந்தது. மேகன் சற்றும் யோசிக்காமல், "Can we meet halfway?' என்று பதிலளித்தார்.
அதாவது, சார்லஸ் தன்னுடன் பாதி வழியில் இணைந்துகொண்டாலே போதும் என்பதே அதன் அர்த்தம்.
இது, மேகன் மார்க்கல் வெட்கத்துடன் வரும் மணமகள் அல்ல, அவர் தன்னம்பிக்கையான, சுதந்திரமான பெண்ணாக தன்னை வெளிப்படுத்தகிக்கொண்டு தானே பிரமாண்டமாக தனது திருமண மேடைக்கு நுழைவதில் உறுதியாக இருந்தார் என்பதற்கான அறிகுறியாக பார்க்கப்பட்டது.
அன்று முதல், ஹரி மற்றும் மேகனுக்கு அவர்களது இரண்டு குழந்தைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட் ஆகியோரை வரவேற்பதில் இருந்து தங்கள் அரச பதவிகளை விட்டு வெளியேறி பிரித்தானியாவை விட்டு கலிபோர்னியாவிற்கு செல்வது வரை மன்னர் சார்லஸுக்கு இடையில் நிறைய நடந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்த தகவல்கள் அனைத்தும் Robert Hardman எனும் அரச எழுத்தாளர் எழுதிய Queen of Our Times புத்தகத்தில் பதிவிடப்பட்டுள்ளது.