இளவரசி டயானா நிராகரித்த திரைப்படத்தில் நடிக்கும் மேகன் மெர்க்கல்...
பிரித்தானிய இளவரசி டயானா நிராகரித்த திரைப்படம் ஒன்றில், அவரது மகனுடைய மனைவியாகிய மேகன் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
வருமானத்துக்கு வழி தேடும் ஹரியும் மனைவியும்
வீறாப்பாக ராஜ குடும்பம் வேண்டாம் என்று முறைத்துக்கொண்டு பிரித்தானியாவை விட்டே வெளியேறியாகியாயிற்று. ஆனால், வருமானம் வேண்டுமே?
ஆம், இளவரசர் ஹரியும் மேகனும் வருவாய் ஈட்ட ஆளுக்கொருபக்கம் என்னென்னவோ முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவ்வகையில், ஹரியின் மனைவி மேகன் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க முயல்வதாக கூறப்படுகிறது. 1992ஆம் ஆண்டு Bodyguard என்றொரு திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் மேகன் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
முத்தக்காட்சிகளால் திரைப்படத்தை நிராகரித்த டயானா
Bodyguard திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க பல ஆண்டுகள் முன்பே திட்டமிடப்பட்டது. அப்போது, அந்த படத்தில் இளவரசி டயானாவை கதாநாயகியாக நடிக்கவைக்க முயற்சிகள் நடந்ததாம்.
அப்போது ஒரு நாள், திரைப்படத்தின் கதாநாயகனான நடிகர் Kevin Costnerஐ அழைத்த டயானா, திரைப்படத்தில் முத்தக்காட்சிகள் இருக்கிறதா என்று கேட்டாராம். அதற்கு Kevin, ஆம் சில முத்தக்காட்சிகள் உள்ளன, ஆனால், அதற்கு நாம் ஏதாவது மாற்று ஏற்பாடுகள் செய்துகொள்ளலாம் என்றாராம் Kevin.
முத்தக்காட்சிகளில் நடிக்க தனக்கு விருப்பமில்லை என்று கூறியிருக்கிறார் டயானா. துரதிர்ஷ்டவசமாக அந்த படம் துவக்கப்படவே இல்லை.
ஆக, இப்போது, டயானா நிராகரித்த கதாபாத்திரத்தில் மேகனைக் காண அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |