இளவரசர் ஹரியைப் பிரிய மேகன் திட்டம்: பரபரப்பை ஏற்படுத்தி வரும் தகவல்
இளவரசர் ஹரியைப் பிரிய அவரது மனைவியான மேகன் திட்டமிடுவருவதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் கூறியுள்ள விடயம் தொடர்பிலான செய்திகள் பிரித்தானிய ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன.
குழந்தைகளையும் பிரிக்கத் திட்டம்
ராஜ குடும்ப எழுத்தாளரான ஏஞ்சலா லெவின் என்பவர், இளவரசர் ஹரியின் மனைவியாகிய மேகன், மெல்ல தன்னை ஹரியிடமிருந்து பிரிப்பதாகவும், தன் பிள்ளைகளையும் தானே பொறுப்பெடுத்துக்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
People
கடந்த சில வாரங்களாகவே, ஹரி மேகன் உறவில் பிரச்சினை உருவாகியுள்ளதாக தொடர்ந்து வதந்திகள் பரவிவருகின்றன.
உறுதி செய்வதுபோல் நிகழ்ந்த சம்பவம்
இதற்கிடையில், வதந்திகளாக பரவிவரும் செய்திகளை உறுதி செய்வது போல் ஒரு விடயம் நிகழ்ந்துள்ளது. ஆம், மே மாதம் 19ஆம் திகதி, ஹரி மேகனுடைய திருமண நாள். ஆனால், தங்கள் ஐந்தாவது திருமண ஆண்டுவிழாவை தம்பதியர் பெரிதாக கொண்டாடவில்லை.
இந்நிலையில், ராஜ குடும்பத்தைக் குறித்து பல புத்தகங்கள் எழுதியுள்ள ஏஞ்சலா லெவின், மேகன் ஹரியைப் பிரிய திட்டமிட்டுவருவதாகத் தெரிவித்துள்ளார்.
thenews
ஹரி மேகன் தம்பதியரின் திருமண வாழ்வு மோசமாக சிதைந்துவிட்டதாக தெரிவித்துள்ள ஏஞ்சலா, ஹரி மோசமான மன நிலைமையில் இருக்கிறார். இப்படிப்பட்ட நேரத்தில் அவருடன் இருக்கவேண்டிய மேகனோ விலகிப்போகிறார்.
முன்பே இது குறித்து கவனமாக திட்டமிட்டு வைத்திருந்த மேகன், இதற்காகவே காத்திருந்ததுபோல, இப்போது தன் குழந்தைகளையும் பிரித்துக்கொண்டு ஹரியை விட்டுப் பிரிய திட்டமிடுகிறார் என்கிறார் ஏஞ்சலா.