இளவரசர் ஹரியை மேகன் கழற்றிவிட்டுவிடுவார்: அது அவரது வழக்கம் என்கிறார் நிபுணர் ஒருவர்
இளவரசர் ஹரியை அவரது மனைவியான மேகன் நிச்சயம் கழற்றிவிட்டுவிடுவார் என்கிறார் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர்.
கடந்த கால வாழ்க்கையைப் பார்த்தால் புரியும்
இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகனும் சமீப காலமாக தனித்தனியே பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதால், அவர்கள் பிரிந்துவிடக்கூடும் என்னும் ரீதியில் செய்திகள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன.
இந்நிலையில், இளவரசர் ஹரியை அவரது மனைவியான மேகன் நிச்சயம் கழற்றிவிட்டுவிடுவார் என்று கூறும் ராஜ குடும்ப நிபுணரான ஹியூகோ விக்கர்ஸ் (Hugo Vickers, 72), மேகனுடைய கடந்த கால வாழ்க்கையை கவனித்தால் அது தெளிவாகப் புரியும் என்கிறார்.
மேகன் தன் தந்தையிடமிருந்து விலகினார், தனது முன்னாள் கணவரை கழற்றிவிட்டார், தனது நெருங்கிய நண்பர்களையும் அவ்வாறே ஒதுக்கிவிட்டார் என்கிறார் ஹியூகோ.
அப்படி மேகன் கழற்றிவிட்டவர்களில், மேகனுடைய நெருங்கிய தோழியான ஜெசிகா (Jessica Mulroney), டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் மற்றும் தொலைக்காட்சி பிரபலமான சோபி ட்ரூடோ ஆகியோரும் அடங்குவர் என கூறப்படுகிறது.
ஆக, அடுத்ததாக, ஹரி தனக்கு தேவையில்லை என மேகன் நினைக்கும் ஒரு நாள் வரும். அப்போது ஹரியையும் மேகன் கழற்றிவிட்டுவிடுவார் என்கிறார் ஹியூகோ!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |