வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியவுடன் டிரம்ப்பை மதிக்காமல் சென்ற மெலானியா? கமெராவில் சிக்கிய காட்சி
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த டிரம்ப், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய நிலையில், அவருடன் சேர்ந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க மறுத்த மெலானியா டிரம்ப்பின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் அபார வெற்றி பெற்றார்.
இதையடுத்து அவரின் பதவியேற்பு விழா சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த பதவி ஏற்பு விழாவை புறக்கணித்த டிரம்ப், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார்.
இதையடுத்து, புளோரிடாவில் டிரம்ப்பும் அவரது மனைவி மெலானியாவும் விமானத்திலிருந்து இறக்கி வந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த புகைப்படக்காரர்களுக்கு டிரம்ப் கை அசைத்து போஸ் கொடுத்தார்.
ஆனால் மெலானியா, டிரம்ப் உடன் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்காமல் இறங்கிய வேகத்தில் நடையை கட்டினார்.
இதனால் டிரம்ப் தனியாளாக நின்று போஸ் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
If “I’m over it” were a person. pic.twitter.com/CLA8WucyXX
— The Lincoln Project (@ProjectLincoln) January 21, 2021
டிரம்ப் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தவுடனே மெலானியா அவரை விவகாரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியானது.
ஆனால் அது குறித்து எந்த ஒரு கருத்தும் மெலானியா டிரம்ப் தெரிவிக்காமல் இருந்த நிலையில், தற்போது அவர் நடந்து கொண்ட விதம் மேலும் சந்தேகத்தை வலு சேர்த்துள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டு மெலானியாவை டிரம்ப் காதலித்து திருமணம் செய்துகொண்டார். , டிரம்பை விட மெலானியா 24 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.