7.5 ஓவர்களில் 103 ஓட்டங்கள்! மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்திய ரெனெகேட்ஸ்
Melbourne renegades beat melbourne stars in dls: WBBL போட்டியில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் DLS முறையில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது.
ஜங்ஷன் ஓவலில் நடந்த WBBL போட்டியில், மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணி DLS முறையில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது.
WBBL டி20 போட்டி
மெல்போர்ன் ரெனெகேட்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதிய WBBL டி20 போட்டி ஜங்ஷன் ஓவலில் நடந்தது.
A HEROIC effort from Chloe Tryon to secure the win and a place in #WBBL12 finals for the @RenegadesBBL 🥵 https://t.co/E4LQM7hJO1
— Weber Women's Big Bash League (@WBBL) November 28, 2026
மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட, முதலில் ஆடிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 8.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 75 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணி 7.5 ஓவர்களில் 103 ஓட்டங்கள் எடுத்து, DLS முறையில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
க்ளோ ட்ரையோன் ஆட்டமிழக்காமல் 17 பந்துகளில் 56 ஓட்டங்கள் (4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்) விளாசினார். டீன், ரைஸ் மெக்கென்னா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.