அபாரமாக பந்துவீசிய இலங்கையின் சமரி அதப்பத்து: ஆனாலும் WBBLயில் தோல்வி
மகளிர் பிக் பாஷ் லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிட்னி தண்டர் அணியை வீழ்த்தியது.
ஹெதர் நைட் 30 ஓட்டங்கள்
ஜங்ஷன் ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் சிட்னி தண்டர், மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணிகள் மோதின.
Perfect placement 👌
— Weber Women's Big Bash League (@WBBL) November 11, 2025
Georgia Voll is away at the CitiPower Centre. #WBBL11 pic.twitter.com/l2d39xRGLN
முதலில் ஆடிய சிட்னி தண்டர் 7 விக்கெட்டுகளுக்கு 148 ஓட்டங்கள் எடுத்தது. அனிகா லியோரொய்ட் 31 ஓட்டங்களும், ஹெதர் நைட் (Heather Knight) 30 ஓட்டங்களும் எடுத்தனர்.
ஜார்ஜியா வார்ஹம், டோட்டின் தலா 2 விக்கெட்டுகளும், டெஸ், அலிஸ் மற்றும் மில்லி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் ஆடிய மெல்போர்ன் ரெனேகேட்ஸ் 73 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
வார்ஹம் 58 ஓட்டங்கள்
சமரி அதப்பத்து (Chamari Athapaththu) அபாரமாக பந்துவீசி நவோமி ஸ்டாலன்பெர்க் (3), டியன்ரா டோட்டின் (3) ஆகிய முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஆனால் அணித்தலைவர் ஜார்ஜியா வார்ஹம் (Georgia Wareham) அரைசதம் அடித்து நெருக்கடி கொடுத்தார். அவர் 32 பந்துகளில் 58 ஓட்டங்கள் விளாசினார்.
மறுமுனையில் நின்று ஆடிய நிக்கோல் ஃபால்டம் (Nicole Faltum), ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் 37 ஓட்டங்கள் விளாச, மெல்போர்ன் அணி 18.1 ஓவர்களிலேயே 151 ஓட்டங்கள் எடுத்து வெற்றிபெற்றது. சமரி அதப்பத்து, ஜார்ஜியா வோல் தலா 2 விக்கெட்டுகளும், சமந்தா மற்றும் ஷாப்னிம் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
Two matches. Two wins.
— Weber Women's Big Bash League (@WBBL) November 11, 2025
The @RenegadesBBL have started their title defence in style. #WBBL11 pic.twitter.com/FQN7tPqbEI
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |