உலகிலேயே அதிக நாட்கள் பொது முடக்கத்தை அனுபவித்த நகரம்! இந்த வாரத்தில் தளர்வுகள் அறிவிப்பு
உலகிலேயே மிக நீண்ட காலமாக முழு ஊரடங்கில் இருந்த அவுஸ்திரேலிய நகரமொன்றில் இந்த வாரம் முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி போட தொடங்கியதிலிருந்து, கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, கோவிட் தொடர்பான கட்டுப்பாடுகள் உலகம் முழுவதும் படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், உலகில் கோவிட் -19 பொது முடக்கத்தின் கீழ் அதிக நேரம் செலவழித்த அவுஸ்திரேலியாவின் நகரமான மெல்போர்னில் உள்ள அதிகாரிகள், இந்த வாரம் வீட்டிலேயே தங்கியிருப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
மார்ச் 2020 முதல், 5 மில்லியன் அவுஸ்திரேலிய-குடிமக்கள் வாழும் மெல்போர்ன் நகரம் 262 நாட்கள் அல்லது சுமார் 9 மாதங்களுக்கு 6 பொதுமுடக்கத்தின் கீழ் இருந்தது.
Picture: Getty Images
அவுஸ்திரேலிய மற்றும் பிற ஊடக அறிக்கையின்படி, இது உலகின் மிக நீண்ட பொதுமுடக்கம் ஆகும், இது அர்ஜென்டினாவில் தலைநரகரமான Buenos Aires-ன் 234 நாள் பொதுமடக்கத்தை தாண்டியது.
அவுஸ்திரேலியாவன் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கத்தின் இரட்டை தடுப்பூசி விகிதம் இந்த வாரம் 70 சதவிகிதத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் அடிப்படையில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு அனுமதிக்கிறது.
விக்டோரியாவில் புதிதாக 1,838 கொரோனா வைரஸ் தொற்றுகள் மற்றும் 7 மரணங்கள் பதிவாகியுள்ளன. அதேசமயம், இப்பகுதியில் உள்ள 80 சதவீத குடியிருப்பாளர்கள் தடுப்பூசி இரண்டையும் பெற்றுள்ளனர்.