கரீபியன் தீவுகளை சூறையாடிய மெலிசா புயல்: ஜமைக்காவில் 19 பேர் உயிரிழப்பு
சக்திவாய்ந்த மெலிசா புயல் தாக்கியதில் கரீபியன் தீவுகள் கடுமையான சேதமடைந்துள்ளன.
கரீபியன் தீவுகளை தாக்கிய மெலிசா புயல்
பசிபிக் பெருங்கடலை சக்தி வாய்ந்த மெலிசா புயல் தாக்கியதில் டஜன் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
கியூபா, ஹைதி, ஜமைக்கா மற்றும் டொமினிக்கன் குடியரசு உட்பட 13 நாடுகளை உள்ளடக்கிய கரீபியன் தீவை மெலிசா புயல் தாக்கியதில் ஹைட்டியில் 30 பேரும், ஜமைக்காவில் 19 பேரும் உயிரிழந்துள்ளனர்.

புயல் பாதிப்புகளுக்கு இடையே மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மெலிசா புயல் காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஜமைக்காவில் புயல் பாதிப்பால் கிட்டத்தட்ட 52 டொலர்கள் அளவுக்கு சேதம் ஏற்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மெலிசா புயலானது தற்போது பெர்முடா நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |