உக்ரைனில் உள்ள முக்கிய நகரை முழுமையாக கைப்பற்றியது ரஷ்யா! வெளியான வீடியோ காட்சி
உக்ரைனில் உள்ள முக்கிய நகரமான Melitopol-ஐ ரஷ்யா முழுமையாக கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் ரஷ்யா கடந்த மூன்று நாட்களாக போர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இரு நாட்டு தரப்பிலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் உக்ரைனின் தெற்கில் உள்ள முக்கிய நகரமான Melitopol-ஐ ரஷ்யா முழுமையாக கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
#Russia'n tanks in Melitopol /south #Ukraine pic.twitter.com/gI8vExEbrQ
— C4H10FO2P (@markito0171) February 26, 2022
Melitopol நகரை முழுமையாக தனது கட்டுப்பாட்டிற்குள் ரஷ்ய ராணுவம் கொண்டு வந்துள்ள நிலையில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இதனிடையில் எப்படியிருந்தாலும் நாங்கள் எங்கள் ஆயுதங்களை கீழே போட போவதில்லை. எங்கள் நாட்டை விட்டுக் கொடுக்க போவதில்லை. இது எங்கள் நாடு என்று உக்ரேன் ஜனாதிபதி செலன்ஸ்கி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.