இத்தாலி வெளியுறவு அமைச்சரின் தனிப்பட்ட தகவல்கள் லீக்: பிரதமர் குற்றச்சாட்டு
Italy's Meloni blames pro-Russian hackers for leaking foreign minister's personal data: இத்தாலி வெளியுறவு அமைச்சரின் தனிப்பட்ட தகவல்கள் லீக் ஆகியுள்ள நிலையில், அது தொடர்பில் ரஷ்ய ஆதரவு ஹேக்கர்கள் மீது இத்தாலி பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார்.
இத்தாலி வெளியுறவு அமைச்சரின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் லீக் ஆகியுள்ளன.
பிரதமர் குற்றச்சாட்டு
இத்தாலி வெளியுறவு அமைச்சரான அன்டோனியோ சஜானியின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இத்தாலி பிரதமரான ஜார்ஜியா மெலோனி, அன்டோனியோ சஜானியின் தனிப்பட்ட தகவல்கள் லீக் ஆனதற்குக் காரணம், ரஷ்ய ஆதரவு ஹேக்கர்கள்தான் என குற்றம் சாட்டியுள்ளார்.
இப்படி முக்கியஸ்தர்களின் தனிப்பட்ட ரகசிய தகவல்களை விற்பனை செய்வது கவலையை ஏற்படுத்தக்கூடிய விடயம் என்று கூறியுள்ள மெலோனி, அத்தகைய விடயங்கள் மிகவும் கவனமாகக் கையாடப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதேபோல, சஜானியும், உக்ரைன் குறித்த எங்கள் நிலைப்பாடே, நாங்கள் இப்படி குறிவைக்கப்படுவதற்குக் காரணம் என்றும், தான் அதைக் கண்டு அஞ்சப்போவதில்லை என்றும், இத்தகைய விடயங்களால் கூட்டாளர் நாடுகள் மீதான தங்கள் நிலைப்பாடு மாறப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.