அமெரிக்க வர்த்தகப் போர்... ஐரோப்பிய ஒன்றியத்தை எச்சரித்த இத்தாலியின் மெலோனி
அமெரிக்காவுடனான வர்த்தகப் பிரச்சினையை பதிலடி வரிகள் மூலம் அதிகரிப்பதற்கு எதிராக இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஐரோப்பிய நாடுகளை எச்சரித்துள்ளார்.
உறவுகளைப் பாதுகாக்க வேண்டும்
மேற்கத்திய நட்பு நாடுகள் தங்கள் நீண்டகால ஒத்துழைப்பைத் தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு நெருக்கமான மெலோனி, ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நிறுவப்பட்ட உறவுகளைப் பாதுகாக்க வேண்டும் என்றார்.
ஆனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒரு சுயாதீனமான பாதுகாப்பு அமைப்பை நிறுவ வேண்டும் என்ற எந்தவொரு ஆலோசனையிலிருந்தும் தன்னை அவர் ஒதுக்கி வைத்துக் கொண்டார்.
ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் பிரிப்பதன் மூலம் நீடித்த பாதுகாப்பு உத்தரவாதத்தை கற்பனை செய்வது சாத்தியமில்லை என்பது யதார்த்தத்தின் எளிய உண்மை என்றும் மெலோனி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை ட்ரம்ப் முறித்துக் கொண்டு, உக்ரைனுக்கு அமெரிக்க ஆயுதங்கள் செல்வதை முடக்கி, உக்ரைனை ரஷ்யாவுடன் சமாதானம் செய்ய கட்டாயப்படுத்தினார்.
மட்டுமின்றி, ஐரோப்பிய எஃகு மற்றும் அலுமினியம் மீது அதிக வரிகளை விதிக்கத் தொடங்கியதுடன், ஐரோப்பிய ஒன்றியத்துடனான அமெரிக்கப் பொருட்களின் வர்த்தகப் பற்றாக்குறை குறித்து புகார் அளித்துள்ளார்.
ஒப்பந்தத்தை முன்னெடுக்க
இந்த நிலையில், அடுத்த மாதம் முதல் 26 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களுக்கு எதிர் வரிகளை விதிக்கப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த நடவடிக்கையின் காரணமாக ஏற்படும் பலன் குறித்து மெலோனி கேள்வி எழுப்பியுள்ளார், மேலும் இத்தாலி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மூலம் ஒரு ஒப்பந்தத்தை முன்னெடுக்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
மெலோனி ட்ரம்புடன் வலுவான உறவுகளை வளர்த்துக் கொண்டுள்ளார், மேலும் ஜனவரியில் அவரது ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட ஒரே ஐரோப்பிய தலைவர் மெலோனி ஆவார்.
ஆனால் கடந்த மாதம் வெள்ளை மாளிகையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை டொனால்டு ட்ரம்ப் உள்ளிட்டவர்கள் அவமானப்படுத்தி அனுப்பியது பல ஐரோப்பிய தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதனால் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் ஒரு பாலமாக உருவாகலாம் என்ற மெலோனியின் திட்டம் தவிடுபொடியானது. மேலும், உக்ரைனுக்கு ஆதரவாக பிரித்தானியாவும் பிரான்சும் தீவிரமாக செயல்பட்டு வரும்போது ட்ரம்பின் கோபத்திற்கு ஆளாகக் கூடும் என்பதால் மெலோனி ஆதரவளிக்க மறுத்து வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |