நன்றி, டியர் மோடி - இந்தியா-இத்தாலி உறவை வலுப்படுத்தும் மெலோனி
Meloni thanks Modi, India-Italy ties stronger: இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறிய வாழ்த்துக்கு மெலோனி நன்றி தெரிவித்துள்ளார்.
நன்றி, டியர் மோடி
இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, இரண்டாம் உலகப்போருக்குப் பின் நீண்ட காலம் தொடர்ந்து பதவி வகித்த பிரதமராக சாதனை படைத்துள்ளார். இதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த மெலோனி, “நன்றி, அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி. இன்று இந்தியா-இத்தாலி உறவு இதுவரை இல்லாத அளவுக்கு வலுவாக உள்ளது” என்று சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்.

மெலோனி, 2022 அக்டோபர் 22 முதல் பிரதமராக உள்ளார். 1,413 நாட்கள் தொடர்ந்து பதவி வகித்ததால், முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
மெலோனி தனது பதிவில், “நாம் தொடங்கிய சிறப்பு மூலோபாய கூட்டாண்மை (Special Strategic Partnership), இரு நாடுகளின் திறமைகளை இணைத்து புதிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தையும் (Economic Corridor) இணைந்து வலுப்படுத்துவோம்” என்று குறிப்பிட்டார்.
மோடி தனது வாழ்த்துச் செய்தியில், “இத்தாலி மக்களின் நம்பிக்கையும் நெருக்கமும் மெலோனியின் தலைமையில் பிரதிபலிக்கிறது. இந்தியா-இத்தாலி உறவை வலுப்படுத்தியதில் அவரது நட்பு முக்கிய பங்கு வகித்துள்ளது” என்று தெரிவித்தார்.
மெலோனி+மோடி=மெலோடி
இரு தலைவர்களின் நட்பு சமூக வலைதளங்களில் “Melodi” என்ற பெயரில் பிரபலமாகியுள்ளது.
2023-இல் COP28 மாநாட்டில் மெலோனி, மோடியுடன் எடுத்த செல்ஃபியை “Good friends at COP28 #Melodi” எனப் பகிர்ந்தபோது, இந்த ஹாஷ்டேக் வைரலானது. பின்னர் G7 மாநாட்டிலும், ரோமில் நடந்த சந்திப்பிலும் இந்த “Melodi” மீம் மீண்டும் பேசுபொருளானது.
இந்தியாவும், இத்தாலியும், மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்தி, கண்டங்கள் இடையேயான உறவை மேம்படுத்தும் முயற்சியில் முன்னேறி வருகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |