பரபரப்பாகும் தமிழ்நாடு அரசியல் களம்... அதிமுக கூட்டத்தில் மாயமான 5 உறுப்பினர்கள்
தவெக ஆட்சி அமைக்க தீவிரம் காட்டிவரும் நிலையில், தற்போது தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாகும் வகையில், அதிமுக கூட்டத்தில் இருந்து 5 உறுப்பினர்கல் மாயமாகியுள்ளனர்.
மாயமான உறுப்பினர்கள்
தவெகவுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் இன்று மாலையில் தகவல் தெரிவிப்பதாக விசிக அறிவித்த சில நிமிடங்களில், தமிழ்நாட்டில் அமையவிருக்கும் ஆட்சிக்கு வாழ்த்து தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்வந்திருந்தார்.

ஆனால், சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற அதிமுக பேரவை உறுப்பினர்கள் கலந்தாலோசனைக் கூட்டத்தில் புதிதாகத் தெரிவான 47 பேர்களில் 42 பேர்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர்.
இந்த நிலையிலேயே எடப்பாடி பழசாமியும் வாழ்த்து தெரிவித்திருந்தார். தவெக ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில், அதிமுக தலைமையில் ஆட்சியமைக்க எடப்பாடி பழனிசாமியும் வெளிப்படையாக நடவடிக்கைகளை எடுத்து வந்தார்.
அதிமுகவுக்கு திமுக ஆதரவு
மட்டுமின்றி, அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் என்றும், அதற்கு திமுக ஆதரவளிக்கப் போவதாகவும் தகவல் வெளியானது. திமுக வட்டாரத்தில் இருந்து இதை உறுதி செய்யவோ நிராகரிக்கவோ இல்லை என்பதால், பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

திமுக மூத்த தலைவர்களின் எதிர்ப்பால் திட்டம் கைவிடப்பட்டது என்றும் தகவல் கசிந்துள்ளது. இதனிடையே, அதிமுக கூட்டத்தில் இருந்து மாயமான 5 உறுப்பினர்கள் எம்ஹ்லே சென்றார்கள்? ஏன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது தொடர்பான தகவல் ஏதும் வெளியாகவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |