ஆணை 'வழுக்கை' என்று அழைப்பது பாலியல் துன்புறுத்தல்! பிரித்தானிய தீர்ப்பாயம் அதிரடி
பணியிடத்தில் ஒரு மனிதனை வழுக்கை என்று அழைப்பது பாலியல் துன்புறுத்தலின் வரம்புக்குள் வரும் என்று இங்கிலாந்தில் உள்ள வேலைவாய்ப்பு தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது.
ஒரு ஆணை 'வழுக்கை' என்று அழைப்பது பாலியல் துன்புறுத்தல் என்றும், அது பெண்ணின் மார்பகங்களை பற்றி கருத்து தெரிவிப்பதற்கு சமம் என்றும் பிரித்தானிய வேலைவாய்ப்பு தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
பெண்களை விட அதிகமான ஆண்களுக்கு முடி உதிர்வதுதான் இந்த முடிவின் அடிப்படையாக அமைந்துள்ளது.
தீர்ப்பாயத்தின் கூற்றுப்படி, ஒரு ஆணின் வழுக்கையைப் பற்றி கருத்து தெரிவிப்பது ஒரு பெண்ணின் மார்பகத்தின் அளவைக் குறிப்பிடுவதற்கு சமம். ஏனென்றால், இது உண்மையிலேயே பாலினத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம், இது பாகுபாட்டைக் குறிக்கிறது என்று தெரிவித்துள்ளது.
ஒரு கையில் குழந்தை, மறுகையில் சூட்கேஸ்., விமானத்தில் பயணிகளை மிரளவைத்த தாய்!
பிரித்தனையாவல் ஒரு எலக்ட்ரீஷியன் மற்றும் அவர் வேலை பார்க்கும் நிறுவன முதலாளிகளுக்கு இடையேயான வழக்கில் தீர்ப்பாயம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
Tony Finn எனும் ஆந்த தொழிலாளி இங்கிலாந்தில் மேற்கு யார்க்ஷயரை தளமாகக் கொண்ட British Bung Company-ல் கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் பணிபுரிந்தார் மற்றும் கடந்த ஆண்டு மே மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, 64 வயதான அவர் நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் தீர்ப்பாயத்தில் புகார் அளித்தார்.
மனைவி மீது ஆசிட் அடித்த நபர் தமிழகத்தில் சாமியார் வேடத்தில் கைது!
அந்நிறுவனத்தின் மேற்பார்வையாளர் ஜேமி கிங் 2019 சம்பவத்தின் போது, தன்னை வழுக்கை என்று அழைப்பதன் மூலம் ஒரு கோட்டைக் கடந்ததாக அவர் குற்றம் சாட்டினார். அதனைத் தொடர்ந்து ஃபின் தனது முதலாளியிடம் புகாரளித்தார், ஆனால் கிங்கிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அவரை மிரட்டுவதாகக் கூறி ஃபின்னை நீக்கியது.
இந்த வழக்கில் தான் தற்போது இப்படி ஒரு தீர்ப்பு வந்துள்ளது.