உளவியல் ரீதியாக தகுதியற்றவர்... ட்ரம்புக்கு எதிராக இந்திய வம்சாவளி ஜனாதிபதி வேட்பாளர் ஆவேசம்
டொனால்டு டிரம்பின் ஆட்சி காலத்தில் ஐநா தூதராக பணியாற்றிய நிக்கி ஹேலி, ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதற்கு உளவியல் ரீதியாக ட்ரம்ப் தகுதியற்றவர் என்று விமர்சித்துள்ளார்.
வாய்ப்புகளை தமக்கு சாதகமாக
குடியரசுக் கட்சியின் போட்டியாளரான டொனால்டு டிரம்ப் மீது இந்திய வம்சாவளி அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் நிக்கி ஹேலி தனது தாக்குதலை கடுமையாக்கியுள்ளார். தேர்தல் நெருங்கிவரும் நிலையில், வாய்ப்புகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அவர் முயன்று வருகிறார் என்றே கூறப்படுகிறது.
@getty
டிரம்ப் ஆட்சியின் போது அமெரிக்காவுக்கான ஐ.நா தூதராக செயல்பட்டவர் நிக்கி ஹேலி. அவர் தற்போது ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
இந்த நிலையில், ஜனாதிபதி பொறுப்புக்கு உளவியல் ரீதியாக ட்ரம்ப் தகுதியற்றவர் என்ற குற்றச்சாட்டை நிக்கி ஹேலி முன்வைத்துள்ளார். 2021 ஜனவரி 6ம் திகதி நடந்த கலவரத்தை தடுக்க நிக்கி ஹேலி தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டை பொதுக்கூட்டம் ஒன்றில் டொனால்டு ட்ரம்ப் முன்வைத்திருந்தார்.
இந்திய வம்சாவளி விமர்சனம்
அதற்கு பதிலளித்த நிக்கி ஹேலி, கலவரம் நடக்கும் போது எந்த பதவியிலும் இல்லாத நான் எவ்வாறு சட்டத்தை நிலைநாட்டுவது என்றார். 80 வயதான ஒருவரை நாம் ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
@ap
மேலும் இந்திய வம்சாவளி என்பதை குறிப்பிட்டு ட்ரம்ப் விமர்சித்ததையும் நிக்கி ஹேலி பொருட்படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது. மேலும் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோருடனான ட்ரம்பின் தொடர்பையும் நிக்கி ஹேலி கடுமையாக விமர்சித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |