ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வென்றது இந்தியா! பாராட்டு மழையில் மீராபாய்
டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளது.
பெண்கள் பளு தூக்கும் போட்டியில் 49 கிலோ பிரிவில் இந்தியா வீராங்கனை மீராபாய் அதிகட்சமாக 115 கிலோ பளு தூக்கி இரண்டாவது இடம் பிடித்து வெள்ளப்பதக்கம் வென்றார்.
சீனாவின் Hou Zhihui அதிகட்பசமாக 116 கிலோ பளு தூக்கி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
இந்தோனேசியாவில் Windy cantika அதிகபட்சமாக 110 கிலோ பளு தூக்கி 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வென்ற முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
That's how you go into the history books! ?
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) July 24, 2021
Saikhom Mirabai Chanu - Olympic silver medallist ??#BestOfTokyo | #Tokyo2020 | #UnitedByEmotion | #StrongerTogether | @mirabai_chanu pic.twitter.com/r1wpEerN9u
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் முதல் தங்கப் பதக்கத்தை சீனா தட்டிச் சென்றுள்ளது.
பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டியின் இறுதிப் போட்டி இன்று நடந்தது.
இதில் சீன வீராங்கனை யாங் கியான் 251 புள்ளி 8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார்.