2024 ஜனவரியில் அறிமுகமாகும் Mercedes Benz GLS Facelift சொகுசு கார்., விலை என்ன தெரியுமா?
ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான Mercedes-Benz இந்தியாவில் புதிய ஆண்டை GLS Facelift அறிமுகத்துடன் தொடங்க தயாராகி வருகிறது. இந்த கார் ஜனவரி 8, 2024 அன்று அறிமுகப்படுத்தப்படும்.
ஜேர்மன் பிராண்டின் ஃபிளாக்ஷிப் 7-seater SUV Mercedes-Benz GLSன் Facelift மொடல் புதிய அம்சங்களுடன் வெளிப்புறத் தோற்றம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இது Catalana Beige மற்றும் Bahia Brown Leather வண்ண விருப்பங்களுடன் வழங்கப்படும்.
விலை மற்றும் போட்டிகள்
GLS Faceliftன் விலை ரூ. 1.50 கோடி (Ex-Showroom price) என எதிர்பார்க்கப்படுகிறது.
அறிமுகப்படுத்தப்பட்டதும் இந்த கார் இந்தியாவில் உள்ள BMW X7, Audi Q8, Volvo XC90 மற்றும் Land Rover Discovery போன்ற பிற சொகுசு SUV கார்களுடன் போட்டியிடும்.
Mercedes-Benz GLS Facelift: எதிர்பார்க்கப்படும் வெளிப்புற புதுப்பிப்புகள்
தற்போதுள்ள மாடலுடன் ஒப்பிடுகையில், GLS Faceliftல் உள்ள grilleல் உள்ள four horizontal louvresக்கு Silver Shadow finish கொடுக்கப்பட்டுள்ளது. புதிதாக வடிவமைக்கப்பட்ட LED ஹெட்லேம்ப்கள் கிரில்லின் இரு முனைகளிலும் காணப்படும்.
இது தவிர, காரில் புதிதாக வடிவமைக்கப்பட்ட முன்பக்க பம்பர் மற்றும் புதிய tail-lamps, air inlet grilles மற்றும் high-gloss black surrounds ஆகியவை அடங்கும். டெயில்-லேம்ப்களில் உள்ள மூன்று புதிய கிடைமட்ட பிளாக் வடிவங்கள் காருக்கு புதிய தோற்றத்தைக் கொடுக்கின்றன. இது தவிர, புதிய GLSல், Himalaya Grey நிறத்தில் புதிய 20 inch Alloy Wheels நிறுவப்பட்டுள்ளன.
Mercedes-Benz GLS Facelift: உட்புற புதுப்பிப்புகள்
Facelift செய்யப்பட்ட GLSன் கேபினில் அதிக மாற்றங்கள் காணப்படும். இது மையமாக பொருத்தப்பட்ட பாரிய touchsreen infotainment system மற்றும் டிரைவரின் instrument clusterஐ பெறும், இது MBUX இன் சமீபத்திய பதிப்பில் கிளாசிக், ஸ்போர்ட்டி மற்றும் டிஸ்க்ரீட் ஆகிய 3 வெவ்வேறு Display Modesஉடன் இயங்கும்.
இது தவிர, இந்த சொகுசு காரில் புதிய Off-Road Mode சேர்க்கப்பட்டுள்ளது. இதில் 360 டிகிரி கமெரா உள்ளது.
Mercedes-Benz GLS Facelift: இன்ஜின் புதுப்பிப்புகள்
புதிய GLS ஆனது தற்போதுள்ள மாடலில் உள்ள அதே Powertrain விருப்பங்களுடன் வரும். அதன் GLS 450 4Matic varient 3.0-Liter 6-cylinder Turbocharge செய்யப்பட்ட பெட்ரோல் எஞ்சினைக் கொண்டிருக்கும் மற்றும் GLS 400d 4Matic 3.0-Liter 6-cylinder Diesel விருப்பத்தைக் கொண்டிருக்கும்.
இரண்டு என்ஜின்களும் 9-Speed Automatic gearboxஉடன் டியூன் செய்யப்பட்டுள்ளன, இது Mercedes 4Matic All-Wheel Drive System வழியாக நான்கு சக்கரங்களுக்கும் சக்தியை அனுப்புகிறது.
2024-ல் Mercedesன் இந்தியா திட்டம்
ஜேர்மன் ஆட்டோமொபைல் பிராண்டான Mercedes-Benz 2024ஆம் ஆண்டில் GLS ஃபேஸ்லிஃப்டுடன் தொடங்கி 9 புதிய மாடல்களை இந்தியாவில் கொண்டு வரும். 2024-ல் வரவிருக்கும் புதிய மெர்சிடிஸ் கார்கள் மற்றும் எஸ்யூவிகளின் விவரக்குறிப்புகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Mercedes Benz GLS Facelift India Launch, Mercedes Benz GLS Facelift 2024, Mercedes Benz GLS Facelift price