Tesla கார்களில் அபாயகரமான குறைபாடு; 1,20,000 கார்களை திரும்பப் பெற்ற நிறுவனம்
தொழில்நுட்ப நிறுவனமான எலோன் மஸ்க்கின் டெஸ்லா (Tesla) நிறுவனம் பாரிய அடியை சந்தித்துள்ளது.
Teslaவின் Model S மற்றும் Model X கார்களில் கடுமையான குறைபாடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதன் காரணமாக டெஸ்லா நிறுவனம் சுமார் 1,20,000 கார்களை திரும்பப் பெற்றுள்ளது.
விபத்தின் போது ஏற்பட்ட பிழை காரணமாக இந்த கார்களின் கதவுகள் தானாக திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் பெரும் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அந்த நிறுவனம் தனது கார்களை திரும்பப் பெற்றுள்ளது.
அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தின் (NHTSA) படி, டெஸ்லா 2021-2023 மாடல்களுக்கான Over-The-Air (OTA) Software Updateஐ வெளியிட்டது. இருப்பினும், இந்த மென்பொருள் side-impact protectionக்கான பாதுகாப்பு தரங்களுடன் இணங்கவில்லை.
ஆரம்ப விபத்து சோதனைகளின் போது, பாதிப்பில்லாத பக்கத்தில் ஒரு கேபின் கதவு திறக்கப்பட்டது என டெஸ்லா கூறியது. அதன்பிறகு, சமீபத்திய மென்பொருள் புதுப்பிப்பில் lockout functionality அம்சம் தவிர்க்கப்பட்டதை நிறுவனம் கவனித்தது.
இந்த பிழையால் யாருக்கேனும் விபத்து ஏற்பட்டதா, அல்லது வாரண்டி க்ளெய்ம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
கடந்த வாரம் 20 லட்சம் கார்கள் திரும்பப் பெறப்பட்டன
டெஸ்லா நிறுவனம் கடந்த வாரம் அமெரிக்காவில் 20 லட்சத்துக்கும் அதிகமான கார்களை திரும்பப் பெற்றது. Autopilot advanced driver-assistance systemல் புதிய பாதுகாப்பு அம்சங்களை நிறுவுவதற்காக இந்த கார்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Tesla Cars Recalled, Tesla Model S, Tesla Model X, Tesla Electric Cars, Elon Musk Tesla