உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டும்... ஆனால்: ஜேர்மன் தலைவர் வலியுறுத்தும் விடயம்
ரஷ்ய உக்ரைன் போரை சீக்கிரமாக முடிவுக்கு வரவே விரும்புகிறோம். ஆனால், அதற்காக உக்ரைனை பலியாடாக ஆக்க முடியாது என ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் கூறியுள்ளார்.
உக்ரைனை பலியாடாக ஆக்க முடியாது
உக்ரைன் போர் முடிவடையை நீண்ட காலம் ஆகலாம் என்று கூறியுள்ள ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ், ஆனால், போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, உக்ரைனை பலியாடாக ஆக்க முடியாது என்று கூறியுள்ளார்.
இந்த ஆண்டில் போர்நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, தான் அது தொடர்பில் நம்பிக்கை இழக்கவில்லை என்றும், அதே நேரத்தில் அப்படி தான் கண்மூடித்தனமாக நம்பிவிடவில்லை என்றும், முக்கியமான விடயம், உக்ரைன் ரஷ்யாவிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள உதவுவதுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.
இன்று உக்ரைனை சரணடைய வைத்து போரை முடிவுக்குக் கொண்டுவருவோமானால், நாளை மற்றொரு நாட்டுக்கு இதே நிலை உருவாகலாம் என்று கூறியுள்ள மெர்ஸ், அதற்கு அடுத்த நாள், நமக்கே அந்த நிலை உருவாகலாம் என்றும் கூறியுள்ளார்.
ஆக, போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவதற்காக உக்ரைனை சரணடையவைக்க முடியாது என அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார் மெர்ஸ்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |