சுவிட்சர்லாந்துக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி
சுவிட்சர்லாந்துக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மூன்றாம் நாடுகளில் தடுப்பூசி பெற்றுக்கொண்டிருந்தால், அது சுவிட்சர்லாந்தில் அங்கீகரிக்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று முதல் (செப்டம்பர் 13), சுவிட்சர்லாந்தில் உணவகங்கள், காபி ஷாப்கள் முதலான மூடிய கட்டிடங்களுக்குள் செல்ல, அனைவருக்கும் கொரோனா பாஸ்போர்ட் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடு சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா வருவோருக்கும் பொருந்தும். பிரச்சினை என்னவென்றால், சுவிட்சர்லாந்துக்கு வருபவர்கள் ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐரோப்பிய பொருளாதார மண்டலத்துக்கு வெளியே உள்ள மூன்றாவது நாடுகள் என அழைக்கப்படும் நாடுகளில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களாக இருந்தால், அந்த தடுப்பூசி சான்றிதழ் சுவிட்சர்லாந்தில் செல்லத்தக்கதல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, அப்படி தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள், மூன்று நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்துகொண்டே இருக்கவேண்டும்!
இந்த கட்டுப்பாடுகள், 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விதிகளை மீறுவோருக்கு 100 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்படும்.
இந்த அறிவிப்பால், குறிப்பாக பிரித்தானியா, வட அமெரிக்கா, பிரேசில், தென்கிழக்கு ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்து வருவோர் பாதிக்கப்பட உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.