ஜேர்மனியில் வேலைவாய்ப்பு தொடர்பில் வெளிநாட்டவர்களுக்கு ஒரு பயனுள்ள செய்தி...
ஜேர்மனியில் உணவகத் துறை, விருந்தோம்பல் துறை முதலான துறைகளில் ஏராளம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை நிரப்ப வெளிநாட்டவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
ஜேர்மனியில் நிலவும் பணியாளர் தட்டுப்பாடு
ஜேர்மனியில் மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களில் பணியாற்றிவந்த பணியாளர்கள் பலர், கொரோனா காலகட்டத்தில் தங்கள் வேலைகளை விட்டு விட்டு வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டார்கள். அதனால், நாட்டின் விருந்தோம்பல் துறையில் இன்னமும் பணியாளர் தட்டுப்பாடு நிலவுகிறது.
ஆகவே, அந்த பணியிடங்களை நிரப்ப வெளிநாட்டவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். வெளிநாட்டிலிருந்து பணியாளர்கள் ஜேர்மனி வருவதற்கு தடையாக இருக்கும் சில புலம்பெயர்தல் தொடர்பான தடைகளை நீக்க ஜேர்மன் அரசு திட்டமிட்டுவருகிறது.
ஜேர்மனியில் நிலவும் பணியாளர்கள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள, ஆண்டொன்றிற்கு ஜேர்மனிக்கு 400,000 புதிய பணியாளர்கள் தேவைப்படுவதாக பெடரல் தொழிலாளர் துறை அமைச்சகம் கணக்கிட்டுள்ளது.
ஆகவே, தகுதியுடையோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Photo: picture alliance/dpa/dpa-Zentralbild | Jens Büttner

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.