இந்தியாவில் பிறந்த பிரபல எழுத்தாளர் கத்தியால் குத்தப்பட்ட விவகாரம்: பிரான்ஸ் ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தி
*இந்தியாவின் மும்பையில் பிறந்த பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி அமெரிக்காவில் கத்தியால் குத்தப்பட்டார்.
*அவரது சாத்தானின் கவிதைகள் என்ற புத்தகம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தியாவில் பிறந்த பிரபல எழுத்தாளர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட விடயம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மும்பையில் பிறந்தவர், பிரித்தானிய அமெரிக்கரான சல்மான் ருஷ்டி (Salman Rushdie, 75). இவர் எழுதிய ’மிட்னைட்ஸ் சில்ட்ரென்’ என்ற நாவல் இவருக்கு பெரும் புகழைப் பெற்றுத்தந்தது.
1988இல், இவரது நான்காவது நாவலான தி சாத்தானிக் வெர்சஸ் என்னும் புத்தகம் வெளிவந்தது. ஆனால், அந்த நாவல் இஸ்லாமைப் பழி தூற்றுகிறது என்று கூறி உலகில் பல முஸ்லிம்கள் ருஷ்டிக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கினர். ஈரான் தலைவரான அயத்தொல்லா கொமேனி ருஷ்டியை கொலை செய்யவேண்டும் என்று பெப்ரவரி 14, 1989 அன்று ஒரு பத்வா வெளியிட்டுள்ளார். இதனால் ருஷ்டிக்கு பிரித்தானிய காவல்துறை பாதுகாப்பு கொடுத்துள்ளது.
[KAE31
இந்நிலையில், நியூயார்க்கில் உரையாற்றிக்கொண்டிருந்த ருஷ்டியை நியூ ஜெர்சியைச் சேர்ந்த Hadi Matar (24) என்னும் நபர் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.
படுகாயமடைந்த ருஷ்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ருஷ்டி தாக்கப்பட்ட விடயம் உலக நாடுகள் பலவற்றில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உலகின் பல பகுதிகளிலிருந்தும் இந்த சம்பவத்துக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
ருஷ்டி தாக்கப்பட்ட விடயம் அறிந்த பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான், பிரான்ஸ், ருஷ்டிக்கு ஆதரவாக நிற்பதாக தெரிவித்துள்ளார்.
அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்றில், 33 ஆண்டுகளாக சல்மான் ருஷ்டி சுதந்திரத்தின் வெளிப்பாடாக இருந்துவந்துள்ளார், அறிவைப் பரப்புவதை எதிர்ப்பதற்கு எதிராக போராடியுள்ளார். அவரது போராட்டம் நம்முடையதும் கூட, அது பிரபஞ்சம் முழுமைக்குமானது. இதற்கு முன்பிருந்ததைவிட இன்று நாம் அவருக்கு கூடுதல் ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.