ஜூனியர் நெய்மரின் சாதனையை முறியடித்த ஜாம்பவான் மெஸ்ஸி
அர்ஜென்டினா மற்றும் புவேர்ட்டோ ரிக்கோ அணிகளுக்கு இடையே நட்பு ரீதியிலான போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் 6-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது.
மெஸ்ஸி புதிய உலக சாதனை
இந்த போட்டியில் 2 கோல்களை assists செய்ததன் மூலம், மெஸ்ஸி புதிய உலகசாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்த 2 அஸ்சிஸ்ட் மூலம், சர்வதேச போட்டிகளில் அதிக அஸ்சிஸ்ட்ஸ் செய்த வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார்.
முன்னதாக, பிரேசிலின் நெய்மர் 59 அசிஸ்ட்ஸ்களுடன் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். தற்போது மெஸ்ஸி இந்த சாதனையை முறியடித்துள்ளார்.
மெஸ்ஸி, கிளப் மற்றும் சர்வதேச போட்டிகளில் மொத்தமாக 398 அசிஸ்ட்ஸ்களை செய்துள்ளார். இதில், ஹங்கேரியை சேர்ந்த ஃபெரெங்க் புஸ்காஸ் 404 அஸ்சிஸ்ட்ஸ்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |