மெஸ்ஸிக்கு அரசர்களுக்கான தங்க உடையை அணிவித்து கௌரவத்த கத்தார்: எழுந்த விவாதம்
ஃபிஃபா உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கு சாம்பியன் கோப்பையை கையளிக்கும் முன்னர் லியோனல் மெஸ்ஸிக்கு அணிவிக்கப்பட்ட உடை தொடர்பில் எழுந்த விவாதத்திற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அரேபிய பாரம்பரிய உடை
அர்ஜென்டினா அணியின் கேப்டனும் உலக அளவில் அறியப்படும் நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்ஸிக்கு சாம்பியன் கோப்பையை கையளிக்கும் முன்னர் கத்தார் ஆட்சியாளரும் ஃபிஃபா தலைவரும் இணைந்து bisht எனப்படும் அரேபிய பாரம்பரிய உடை ஒன்றை அணிவித்துள்ளனர்.
@getty
இது உலக அளவில் பார்வையாளர்கள் மத்தியில் குழப்பத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. அர்ஜென்டினா கால்பந்து அணியின் உடையை மூடி மறைக்க, கத்தார் இவ்வாறாக நடந்து கொள்கிறது என சிலர் கூற, ஆனால் எஞ்சிய அணி வீரர்களுக்கு அவ்வாறான உடையை கத்தார் ஆட்சியாளர் அப்போது வழங்கவில்லை என்ற கேள்வியும் எழுந்தது.
திடீரென்று மெஸ்ஸியிடம் அவ்வாறான உடையை அணிந்துகொள்ள கூறப்பட்டதும், அவரும் ஒரு நொடி குழம்பிப்போனதாகவே காணப்பட்டார். ஆனால் அவருக்கு அப்போது விளக்கமளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
@getty
இந்த நிலையில் மெஸ்ஸி அணிந்துகொண்ட அந்த உடையின் சிறப்பு மற்றும் அதை யார் யார் அணிந்துகொள்வார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. bisht எனப்படும் அரேபிய பாரம்பரிய உடையானது தங்க இழைகளால் உருவாக்கியுள்ளனர். அத்துடன் கத்தார் உலகக் கோப்பையின் வண்ணத்திலும் அதை தைத்துள்ளனர்.
அரசர்களுக்கான சிறப்பு உடை
மட்டுமின்றி, மகத்தான கௌரவத்தின் அடையாளமாக குறித்த அங்கி அணியப்படுகிறது. அரேபிய நாடுகளில் அரசர்கள், உயர் பொறுப்பில் இருக்கும் இமாம்கள், அமீர்கள் உட்பட முதன்மையான நபர்கள் முக்கிய தருணங்களில் இந்த உடையை அணிவதுண்டு.
@getty
உலகக் கோப்பை கொண்டாட்டங்களின் உத்தியோகப்பூர்வ நிமிடங்களில் மொத்தமும் லியோனல் மெஸ்ஸி அரசர்களுக்கான அந்த சிறப்பு உடையிலேயே காணப்பட்டார்.
மட்டுமின்றி, bisht உடையில் மெஸ்ஸியை காண நேர்ந்த கத்தார் மற்றும் அரேபிய மக்கள் பெருமையுடன் நன்றி தெரிவிக்கவும் பாராட்டவும் செய்துள்ளனர்.