ஐ லவ் யூ - முன்னாள் வீரருக்கு மெஸ்ஸியின் இதயப்பூர்வமான செய்தி: நெகிழ்ச்சியில் ஆழ்ந்த ரசிகர்கள்
PSG வீரர் லயோனல் மெஸ்ஸி பார்சிலோனா அணியில் தன்னுடன் விளையாடிய செர்ஜியோ புஸ்கெட்ஸுக்கு வீடியோ வாயிலாக பிரியாவிடை அளித்தார்.
செர்ஜியோ புஸ்கெட்ஸ்
பார்சிலோனா கிளப் அணியில் லயோனல் மெஸ்ஸியுடன் இணைந்து பல ஆண்டுகள் விளையாடியவர் செர்ஜியோ புஸ்கெட்ஸ். இவர்கள் இருவரும் மே 10ஆம் திகதி அன்று 2022-23 சீஸனின் முடிவில் பிரிந்து செல்வதாக அறிவித்தனர்.
? Leo Messi's video message to Sergio Busquets: pic.twitter.com/v5SbAX8VG6
— FC Barcelona (@FCBarcelona) May 31, 2023
இதன்மூலம் தங்கள் 18 ஆண்டுகால பயணத்தை முடித்துக் கொண்டனர். இந்நிலையில் நேற்றைய தினம் Camp Nouயில் புஸ்கெட்ஸுக்கு சிறப்பு பிரியாவிடை நிகழ்ச்சி நடந்தது.
இதில் கலந்துகொள்ள மெஸ்ஸிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரால் நேரில் கலந்துகொள்ள முடியவில்லை. எனினும் அவர் காணொளி வாயிலாக தோன்றி தனது இதயப்பூர்வமான செய்தியை அனுப்பினார்.
மெஸ்ஸியின் உருக்கமான வாழ்த்து
செர்ஜியோ குறித்து அவர் கூறும்போது, 'ஹலோ Buse, மன்னிக்கவும் என்னால் அங்கு இருக்க முடியாது. இத்தனை ஆண்டுகளாக நீங்கள் கிளப்புக்கு நிறைய கொடுத்தீர்கள், உங்களுடன் பல ஆண்டுகள் விளையாடியது மற்றும் ஆடுகளத்திற்கு வெளியே உள்ள தருணங்களைப் பகிர்ந்துகொள்வது ஒரு பாக்கியம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். ஐ லவ் யூ; உனக்கு தெரியும்' என கூறியுள்ளார்.
skysports
மெஸ்ஸியின் இந்த பிரியாவிடை வாழ்த்து செர்ஜியோ, பார்சிலோனா உட்பட அனைத்து ரசிகர்களின் மனதையும் கவர்ந்தது.
Getty
skysports