யாருக்கும் கிடைக்காத மரியாதை..! லியோனல் மெஸ்ஸிக்கு அமெரிக்காவின் உயரிய விருது
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு அமெரிக்காவின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் உயரிய விருது
உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸிக்கு அமெரிக்காவின் உயரிய விருதான ‘பிரசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம்’ (Presidential Medal Of Freedom) வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த விருதை பெற்ற முதல் கால்பந்து வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றுள்ளார்.
Today, President Biden awarded the Presidential Medal of Freedom to 19 great leaders who have made America a better place. pic.twitter.com/d610LtMoes
— The White House (@WhiteHouse) January 4, 2025
1963 முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருது, அமெரிக்காவின் வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் சமூக நலன் போன்ற துறைகளில் சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு, ஹிலரி கிளிண்டன், டென்சல் வாஷிங்டன் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் மெஸ்ஸியும் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேரில் கலந்து கொள்ளாத மெஸ்ஸி
சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த விருதை வழங்கினார்.
ஆனால், ஏற்கனவே ஒப்புக்கொண்ட சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டிய காரணத்தால் மெஸ்ஸி இந்த விழாவில் நேரில் கலந்து கொள்ளவில்லை.
இருப்பினும், வெள்ளை மாளிகையை தொடர்பு கொண்டு மெஸ்ஸி இந்த விருதை பெறுவதை கவுரவமாக கருதுவதாக தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்காவின் இண்டர் மியாமி அணியில் விளையாடி வரும் மெஸ்ஸி, அர்ஜென்டினா அணிக்காக 191 கோல்களை அடித்துள்ளார்.
8 முறை பலோன் தி ஓர் விருதையும், 2 பிஃபா உலகக் கோப்பை கோல்டன் பால் விருதையும் வென்றுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பிஃபா உலகக் கோப்பையில் மெஸ்ஸி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |
Lionel Messi, Presidential Medal Of Freedom, Football