'மெஸ்ஸி ஒரு வேற்றுகிரகவாசி' உணர்ச்சிவசப்பட்ட அர்ஜென்டினா கால்பந்தாட்ட வீரர்!
அர்ஜென்டினா கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி ஒரு வேற்றுகிரகவாசி என அவரது சக வீரர் ரோட்ரிகோ டி பால் உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார்.
லியோனல் மெஸ்ஸி 'வேற்றுகிரகவாசி'
லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) நவீன காலத்தில் கால்பந்து விளையாட்டை அலங்கரித்த சிறந்த வீரர்களில் ஒருவர் என்பது மறுப்பதற்கில்லை. அவரது புகழ்பெற்ற வாழ்க்கையில், 2022 டிசம்பரில் உலகக் கோப்பை கோப்பையை முதன்முறையாக வென்றதன் மூலம் அவரது புகழ் புதிய உச்சத்திற்கு சென்றது.
தற்போது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப்பில் விளையாடிவரும் மெஸ்ஸியை விவரிக்க பொதுவாக மந்திரவாதி, மாயாஜாலக்காரர் உள்ளிட்ட பல உரிச்சொற்கள் பயன்படுத்தப்படுகினறன. அந்த வகையில், இப்போது அட்லெடிகோ மாட்ரிட் (Atlético de Madrid) கிளப்பின் நடுகள வீரர் ரோட்ரிகோ டி பால் (Rodrigo de Paul), லியோனல் மெஸ்ஸியை ஒரு மேஜிக் செய்யும் 'வேற்றுகிரகவாசி' என வர்ணித்துள்ளார்.
AP
இருவரும் 2022 FIFA உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணிக்காக ஒன்றாக 7 போட்டிகளில் விளையாடினர்.
அர்ஜென்டினாவின் வெற்றியில் மெஸ்ஸி பெரும் பங்கு வகித்தார். கத்தாரில் நடந்த பல ஆட்டங்களில் மூன்று முறை உதவியதோடு ஏழு கோல்களை அடித்து அவர் கோல்டன் பால் விருதையும் வென்றார்.
அட்லெடிகோ மாட்ரிட் கிளப்பில் இணைய அழைப்பு
TheSun
மெஸ்ஸி PSG உடனான தனது ஒப்பந்தத்தை நீட்டிப்பாரா அல்லது வேறு கிளப்புக்கு மாறுவாரா என்று பலரும் மெஸ்ஸியின் முடிவுக்காக காத்திருக்கும் நிலையில், அவரை தன்னுடன் ஸ்பெயினின் அட்லெடிகோ மாட்ரிட் கிளப்பில் இணையுமாறு டி பால் கேட்டுக்கெண்டுகொண்டார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய டி பால், லியோனல் மெஸ்ஸி பற்றிய தனது கருத்துக்களை அவர் தெரிவித்தபோது இதனை கூறினார்.
"லியோ மெஸ்ஸி செய்வது மாயாஜாலம். அவர் என்ன செய்வார் என்ற ஆச்சரியத்துடன் நீங்கள் வாழ்கிறீர்கள், அதை புரிந்து கொள்ளவே முடிவதில்லை. அவர் ஒரு வேற்றுகிரகவாசி. அவர் அதை இழக்கப் போகிறார் என்று நீங்கள் நினைக்கும் போது, அவர் அதைக் கொண்டு வருகிறார். அவர் உங்களைப் பார்க்கவில்லை என்று நீங்கள் நினைக்கும் போது, அவர் உங்களை கோல்கீப்பருக்கு எதிராகத் தனியாக விட்டுவிடுகிறார். இன்னும் நிறைய சொல்லலாம், அது உங்களை ஆச்சரியப்படுத்துவதை நிறுத்தாது," என்று டி பால் கூறினார்.
? "Leo Messi es un EXTRATERRESTRE" ??
— El Larguero (@ellarguero) March 16, 2023
? "Cuando crees que la va a perder, sale. Cuando piensas que no te ve, te deja solo contra el portero. Cuando crees que está cansado, tiene una marcha más..."
? ?? @rodridepaul, sobre cómo es jugar con Leo Messi pic.twitter.com/jsic3UXExP