மெஸ்ஸி, ரொனால்டோவை விட கோல் கணக்கில் சாதித்த நட்சத்திரங்கள்: அறியப்படாத வீரர்கள்
லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய இருவரும் கால்பந்து உலகில் சமகால ஜாம்பவான்கள். இருவரும் தங்கள் தேசிய அணிக்காக களமிறங்கி, 100 கோல்களுக்கு மேல் அடித்து சாதனை புரிந்தவர்கள்.
ரொனால்டோவை விட சாதித்தவர்கள்
கால்பந்து உலகை ஆதிக்கம் செலுத்திவரும் இருவரும் அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா அணிகளுக்காக தற்போது விளையாடி வருகின்றனர். போர்த்துகல் அணிக்காக ரொனால்டோ இதுவரை 123 கோல்களை பதிவு செய்துள்ளார். அதேவேளை அர்ஜென்டினா அணிக்காக 103 கோல்களை மெஸ்ஸி பதிவு செய்துள்ளார்.
ஆனால் ஈரானிய கால்பந்து நட்சத்திரம் அலி தேய் என்பவர் தமது தேசிய அணிக்காக 109 கோல்களை பதிவு செய்துள்ளார். இது இவ்வாறிருக்க, சமகால கால்பந்து உலகின் உச்ச நட்சத்திரம் என கொண்டாடப்படும் ரொனால்டோவை விட சாதித்தவர்கள் ஊடக வெளிச்சம் பெறாமல் உள்ளார்கள் என்றே கூறுகின்றனர்.
உலகில் அதிக கோல்களை பதிவு செய்தவர்கள் பட்டியலில் முதல் 7 இடங்களில் பெண்களே உள்ளனர். கனடாவின் Christine Sinclair தாம் களமிறங்கியுள்ள 322 ஆட்டங்களில் மொத்தம் 190 கோல்கள் பதிவு செய்துள்ளார்.
மெஸ்ஸி 18வது இடத்தில்
இரண்டாவது இடத்தில் அமெரிக்க கால்பந்து வீராங்கனையான Abby Wambach மொத்தம் 184 கோல்களை பதிவு செய்துள்ளார். அமெரிக்க நட்சத்திரமான Mia Hamm மொத்தம் 158 கோல்களை பதிவு செய்துள்ளார்.
ஜோர்தான் வீரர் Maysa Jbarah இந்த பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். இவர் 129 ஆட்டங்களில் 133 கோல்களை பதிவு செய்துள்ளார். இன்னொரு அமெரிக்க நட்சத்திரம் Carli Lloyd 134 கோல்களை பதிவு செய்துள்ளார்.
அமெரிக்காவின் Kristine Lilly மொத்தம் 130 கோல்களை பதிவு செய்துள்ளார். ஜேர்மனியின் Birgit Prinz மொத்தம் 128 கோல்களை பதிவு செய்துள்ளார். தொடர்புடைய பட்டியலில் மெஸ்ஸி 18வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |