ஏலத்தில் சாதனை படைத்த மெஸ்ஸியின் உலகக்கோப்பை jerseys.. எவ்வளவு கோடிகள் தெரியுமா?
உலகக்கோப்பை தொடரின்போது லியோனல் மெஸ்ஸி அணிந்திருந்த ஜெர்சிகள் பல கோடிகளுக்கு ஏலம் போயுள்ளன.
அர்ஜென்டினா அணி
2022 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 35 ஆண்டுகளுக்கு பிறகு 3 -வது உலகக்கோப்பையை வென்றது.
இறுதிச்சுற்றில் பிரான்ஸுடன் மோதிய போது லியோனல் மெஸ்ஸி 7 கோல்களை அடித்தார். மேலும், உலகக்கோப்பை தொடரில் 4 ஆட்ட நாயகன் விருதுகளையும் பெற்றுள்ளார்.
பல கோடிக்கு ஏலம் போன jerseys
கடந்த 14 -ம் திகதி நியூயார்க்கில் உலகக்கோப்பை தொடரில் மெஸ்ஸி அணிந்திருந்த அர்ஜெண்டினா அணியின் jerseys ஏலம் விடப்பட்டன.
ஏலத்தில் மெஸ்ஸியின் இந்த 6 ஜெர்சிகளும் 7.8 மில்லியன் டொலருக்கு விற்பனையாகியுள்ளன. இந்திய மதிப்பில் இதன் மதிப்பு ரூ.65 கோடியாகும்.
இதுகுறித்து ஏலத்தை நடத்திய நிறுவனம் சார்பில், "ஒரு வீரருக்கு சொந்தமான பொருள் அதிக விலைக்கு விற்பனையாவது இதுவே முதல்முறையாகும். மெஸ்ஸியின் 6 ஜெர்சிகளில் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் அணிந்திருந்த ஜெர்சியும் இருந்ததால் தான் அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |