இஷா அம்பானியின் ஆடையை வடிவமைக்க 10,000 மணி நேரமா! அப்படி என்ன ஸ்பெஷல்?
இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, மெட்காலா (Met Gala 2024) நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அணிந்திருந்த ஆடை கவனத்தை பெற்றுள்ளது.
Met Gala 2024
மெட்காலாவில் (Met Gala 2024) உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் புதுவிதமான ஆடைகளை அணிந்து வருவார்கள்.
அந்தவகையில் நடப்பு ஆண்டில் நிகழ்ச்சிக்கு கருப்பொருளாக வைக்கப்பட்டது 'Sleeping Beauty Awaken's Fashion' ஆகும்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இஷா அம்பானி அணிந்திருந்த ப்ளோரல் கவுன் (gown) அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.
இந்த ஆடையை வடிமைத்தவர் ராகுல் மிஸ்ரா (Rahul Mishra) ஆவார். இவரும், இவரது உதவியாளர்களும் சேர்ந்து இந்த ஆடையை வடிவமைக்க 10000 மணி நேரம் எடுத்துக் கொண்டதாம்.
பூக்கள், பட்டாம்பூச்சிகள் மற்றும் டிராகன் ஈக்கள் ஆகியவற்றை உள்ளடக்கி நுட்பமான எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருக்கிறது.
அதாவது இந்தியாவில் கைப்பட எம்ப்ராய்டரி செய்யப்பட்ட பின்னர் தான் அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் உள்ள மெட்ரோபாலிடியன் மியூசியத்திற்கு சென்றதாம்.
Met Gala 2024 நிகழ்ச்சியில் இஷா அம்பானி அணிந்திருந்த ஆடையின் கருப்பொருள் "The Garden of Time". இந்த ஆடையானது fareesha, zardozi, nakshi மற்றும் dabka ஆகிய வகைகளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது என்று வடிவமைப்பாளர் அனைதா ஷெராஃப் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் மக்களின் பங்களிப்பையும் ஊக்குவிப்பதற்காக இந்தியாவில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று இந்த ஆடைக்கான எம்பிராய்டரி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், இஷா அம்பானி வைத்திருந்த பர்ஸும் பாரம்பரிய முறையில் தயார் செய்யப்பட்டுள்ளதாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |