163 பேர் சேர்ந்து உருவாக்கிய புடவையை அணிந்த ஆலியா பட் - வைரலாகும் புகைப்படம்
2024 ஆம் ஆண்டிற்கான மெட் காலா நிகழ்ச்சியில் நடிகை ஆலியா பட் அணிந்திருந்த ஆடையானது உலகமே பேசும் அளிவிற்கு கவரப்பட்டுள்ளது.
மெட் காலா 2024 - ஆலியா பட்
மெட் காலா 2024 ஆம் ஆண்டிலும் ஆலியா பட் பார்வையாளர்களை கவர்ந்துள்ளார். இந்த ஆண்டு இந்திய கலாச்சாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் சர்வதேச அளவில் பல நடிகைகள் கலந்துக்கொண்ட விதவிதமான உடையை அணிந்திருந்தார்கள்.
இவ்வாண்டு பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் பங்கேற்காத நிலையில், ஆலியா பட் கலந்துக்கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் எனலாம்.
இதில் அவர் அணிந்திருந்த ஆடையானது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த ஆண்டின் கருப்பொருள் தி கார்டன் ஆஃப் டைம் (The Garden of Time).
இதில் கண்ணாடி மணிகள் மற்றும் அரை விலையுயர்ந்த ரத்தினக் கற்களைப் பயன்படுத்தி கையால் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட மலர்களால் ஆலியா பட் புடவையை உருவாக்கியுள்ளார்.
இந்த புடவையானது 163 நபர்களால் 1965 மணித்தியாலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மெட் காலா 2024 இல் சேலை அணிந்து இந்திய கலாச்சாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக நடிகை ஆலியா பட் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறார்.
மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |