பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு
இலங்கையில் 2023 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சை ஆரம்பமாகியுள்ள நிலையில், பரீட்சாத்திகளுக்கு விஷேட அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
விசேட அறிவிப்பு
இலங்கையில் தற்போது வெப்பமான காலநிலை நிலவி வருவதால் பல தோல் சம்பந்தப்பட்ட நோய்களும் நீர்ச்சத்து குறைபாடும் ஏற்படுவதாக கொழும்பு ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
எனவே பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் இதனால் கஷ்டப்படுவதாகவும் பரீட்சைக்கு முகம் கொடுக்க முடியாத நிலை காணப்படுவதாகவும், இதை தவிர்ப்பதற்காக நீர் உள்ளிட்ட இயற்கை பானத்தை அருந்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் பரீட்சையில் இருக்கும் போது தண்ணீர் அருந்துவதால் நேரம் வீணடிக்க நேரிடும் என்று நினைக்காமல், முடிந்தவரை நீர் அருந்துங்கள்.
செல்லும் போது மாணவர்கள் தண்ணீர் போத்தலை எடுத்துச் செல்வது கட்டாயமாகும். தேர்வு எழுதும் போது தண்ணீர் அருந்துவது அவசியமாகும்.
மேலும் இந்த நாட்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இளநீர்,சூப், கஞ்சி, பழச்சாறு போன்றவற்றை அருந்த வேண்டும். நீரிழப்பு மற்றும் வெப்ப அதிர்ச்சியில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
செயற்கை இனிப்பு பானங்கள் அருந்துவதை குறைத்துக்கொள்ளவும். இதனால் உடலில் உள்ள நீர்ச்சத்தானது குறையும்.
மேலும் செயற்கை திரவங்களை தவிர்த்து இயற்கை திரவங்களை பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக்கொள்ளவும் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |