லண்டன் வீதியில் நபரின் செயலால் பரபரப்பு..விரட்டிப் பிடித்த பொலிஸார் (வீடியோ)
இங்கிலாந்தில் செல்போன்களை திருடிய நபரை பொலிஸார் மடக்கிய பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விரட்டிப் பிடித்த பொலிஸார்
மத்திய லண்டனின் பரபரப்பான வீதியில், சுற்றுலாப் பயணியிடம் நபர் ஒருவர் திருட முயன்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, சில நிமிடங்களிலேயே பொலிஸார் அந்நபரை விரட்டிப் பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்து 9 செல்போன்கள் மற்றும் ஒரு Machete ரக கத்தியை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
குறித்த நபர் Piccadilly Circus பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான பரபரப்பு வீடியோ பகிரப்பட்டுள்ளது.
நிறைய செய்ய வேண்டியிருக்கிறது
இந்த ஆண்டின் முதல் பாதியில் 750க்கும் மேற்பட்ட திருடப்பட்ட செல்போன்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
இதுதொடர்பாக Detective கண்காணிப்பாளர் சாஜ் ஹுசைன் கூறுகையில், "இந்த கண்காணிப்பு மற்றும் வேகமாக செயல்படும் இந்த அதிகாரிகளுக்கு நன்றி, மற்றொரு செல்போன் திருடன் லண்டன் வீதிகளில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கொள்ளையினால் பாதிக்கப்பட்டவர்கள் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். மேலும் லண்டனை பாதுகாப்பானதாக்கும்போது, சிக்கலை சமாளிக்க இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது என்பதையும் நாங்கள் அறிவோம்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |