Facebook, WhatsApp, Instagram ஊழியர்களின் சராசரி சம்பளம் என்ன?
Meta-வின் Facebook, WhatsApp மற்றும் Instagram-ல் பணிபுரியும் ஊழியர்கள் உலகளவில் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.
Meta இன்று உலகளவில் மிகப்பாரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும். பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என நீங்கள் தினமும் அதிக நேரம் செலவிடுவது மெட்டாவின் செயலிகள் தான்.
இந்த இணையதளங்கள் நேரத்தை வீணடிப்பதாக முன்பு புகார் கூறப்பட்டது. அனால், இப்போது பலர் ரீல் தயாரித்து, விளம்பரம் செய்து, செல்வாக்கு செலுத்தி, சொந்த பக்கம் உருவாக்கி வருமானம் ஈட்டுகின்றனர்.
இந்தப் ஆப்களைப் பயன்படுத்தி வருமானம் ஈட்டுவது வேறு, இந்த ஆப்களில் பணிபுரியும் ஊழியர்களாகப் பணம் பெறுவது வேறு.
இந்த Facebook, Instagram மற்றும் WhatsApp ஊழியர்களின் சராசரி சம்பளம் எவ்வளவு தெரியுமா?
2023-ஆம் ஆண்டில், Meta CEO மார்க் ஜுக்கர்பெர்க் 24.4 மில்லியன் டொலரை இழப்பீடு பெற்றார்.
உலகம் முழுவதும் மெட்டா நிறுவனம் சுமார் 67000 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
ஊடக அறிக்கைகளின்படி, மெட்டாவில் பணிபுரியும் ஊழியர்களின் சராசரி சம்பளம் சுமார் 379,000 டொலர்கள் ஆகும். அதாவது இலங்கை பணமதிப்பில் தோராயமாக ரூபா 11 கோடி ஆகும்.
சராசரி வருமானத்தின் அடிப்படையில், 50 சதவீத மெட்டா பணியாளர்கள் 2018-இல் 379,000 டொலருக்கு மேல் சம்பாதித்துள்ளனர். ஆனால் மற்ற 50 சதவீதம் பணியாளர்களின் வருமானம் இதைவிடக் குறைவு.
Meta-வில் மிகக்குறைந்த ஆண்டு சம்பளம் $40,000 ஆகும். அதாவது இலங்கை பணமதிப்பில் தோராயமாக ரூபா 1.18 கோடி ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Meta Facebook Instagram Whatsapp, Meta employees average salary, Facebook employees salary, Instagram employees salary, WhatsApp employees salary