மெட்டா நிறுவனத்தின் அடுத்தடுத்த புதிய அப்டேட்கள்: இன்ஸ்டாகிராமில் சேனல் என்ற புதிய அம்சம் அறிமுகம்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் “சேனல்” என்ற புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் சேனல்
மெட்டா நிறுவனத்தின் சமூக ஊடக பக்கங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் “சேனல்” என்ற புதிய அம்சத்தை உலக அளவில் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சேனல் அம்சத்தின் மூலம் இன்ஸ்டாகிராம் கிரியேட்டர்கள் அவர்களது புதிய கண்டெண்ட்களை தினசரி தங்களது பின் தொடர்பாளர்களுக்கு இதன் மூலம் பதிவிட முடியும்.
இந்த சேனல் அம்சத்தை பயனர்கள் உருவாக்கும் போது அவர்களது கணக்கினை பின்தொடர்பவர்களுக்கு சேனலில் இணையும் படி அறிவுறுத்தும் நோட்டிபிகேஷன் உடனடியாக அனுப்பப்படும்.
சேனலின் கட்டுப்பாடுகள்
இந்த சேனல் அம்சத்தில் சம்பந்தப்பட்ட கணக்கை வைத்து இருக்கும் கிரியேட்டர்கள் மட்டுமே புதிய பதிவுகளை இந்த சேனலில் பகிர முடியும். பின்தொடர்பாளர்களால் இந்த பதிவுகளை பார்வையிட்டு ரியாக்ஷன் மற்றும் லைக்கள் மட்டுமே வழங்க முடியும்.
கணக்கின் பின் தொடர்பாளர்களாக இல்லாமல் இருக்கும் நபர்களால் சம்பந்தப்பட்டவரின் கணக்கிற்குள் சென்று சேனல் அமைப்பில் இணைந்து கொள்ள வேண்டியது தான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |